/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ptr_0.jpg)
சென்னையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்துப் பேசினார். தமிழக நிதியமைச்சர் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது தொடர்பாகப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்த நிலையில், அதுதொடர்பாக காட்டமான கருத்துக்களை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இன்று சென்னை விமான நிலையத்தில் போலீசார் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவங்களும் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது சென்னையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)