/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/326_2.jpg)
நடிகர் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுகதையில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதன்பிறகு அரசியல் தலைவர்கள், திரைத்துரையினர், சில இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து நடிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், நேற்று முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் தலைசிறந்த கலைஞர் என்னால் பாதிக்கபடுவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது, விஜய்சேதுபதியின் கலைப்பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்று இத்திரைப்படத்திலிருந்து அவரை விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் இத்திரைப்படத்தில் இருந்து தான் விலகிக்கொள்வதாக தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு அடையாளம் தெரியாத நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு மிக வக்கிரமான மிரட்டல் ஒன்றை விடுத்தார். இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வலுவான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதுதொடர்பாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)