அண்மையில் தாக்கிய கஜா புயலால்தமிழகத்தின் டெல்டாமாவட்டங்களானநாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட பல மாவட்டங்கள்பெரும்சேதத்தையும், அழிவையும்சந்தித்தது மக்களைஅன்றாட உணவிற்கேகையேந்தும் நிலைக்குத் தள்ளியது.இந்த புயல்தாக்குதல்களிலிருந்து மக்கள்மீண்டெழுந்து வரும் செய்திகள் தொடர்ந்து நம் காதை எட்டினாலும் ஒரு சில சம்பவங்கள், ஒரு சில நிகழ்வுகள் கேட்போருக்கு பெரும் சோகத்தையும் மீளமுடியாத துயரத்தையும் ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. அப்படி ஒரு சம்பவம்தான் பட்டுக்கோட்டையில் நடந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பட்டுக்கோட்டையில் விவசாயி ஒருவர் புயலால் ஏற்பட்ட தாக்கத்தினால் வேலையற்ற நிலையில்பெற்ற மகனையே பத்தாயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் நடந்துள்ளது.
பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான மாரிமுத்து அவரது மனைவிவசந்தா. இந்ததம்பதியினர் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடிழந்த நிலையில்தங்களது நான்காவது மகனை10 ஆயிரம் ரூபாய்க்கு ஆடு மேய்க்க கொத்தடிமையாகவிற்று விட்டனர்.
புயல் பாதிப்பை அதிகாரிகளிடம் முறையிட்டும் உதவி செய்ய முன்வராததால் பெற்ற மகனை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டதாகஅந்தவிவசாய குடும்பத்தினர் கண்ணீருடன் கூறுகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாகப்பட்டினத்தை அடுத்த பனங்குடி என்ற இடத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கு கொத்தடிமையாக தனது மகனை சேர்த்ததாக தந்தையான மாரிமுத்தே கூறியது கண்ணீரை வரவழைத்தது. அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுவன் நாகை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பரிந்துரையின் பேரில் தஞ்சையில் உள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சிறுவனை கொத்தடிமையாக வாங்கிய சந்துரு என்ற நபர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.