Skip to main content

திருமணமாகாத விரக்தியில் மனநல சிகிச்சை பெற்றுவந்த மகன் வெறிச்செயல்... 

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

Son who received psychiatric treatment in frustration of not getting married

 

திருச்சி, ஏர்போர்ட், அழகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகோபால் (81). இவர், திருச்சி பெல் (BHEL) ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லீலாவதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தார்.

 

இவர்களுக்கு கிருஷ்ணவேணி, கீதா, ஹேமா, பிரேமா என்ற நான்கு மகள்களும், ரவி, பிரபோத சந்திரன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் 4 மகள்கள், 1 மகன் என ஐந்து பேர் திருமணமாகி பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக வசிக்கின்றனர். நந்தகோபால் தனது நான்காவது மகன் பிரபோத சந்திரன் என்பவருடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

 

திருமணமாகாத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட நான்காவது மகன் பிரபோத சந்திரன் திருச்சி தனியார் மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இன்று நந்தகோபாலின் பேத்திக்கு சென்னையில் நடைபெறும் பூப்பு நீராட்டு விழா தொடர்பாக நேற்று இரவு தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும், தனக்குத் திருமணம் செய்துவைக்கும்படியும், சொத்தில் பாகம் கேட்டும் தந்தை நந்தகோபாலிடம் தகராறில் ஈடுபட்ட பிரபோத சந்திரன், ஆத்திரத்தில் வீட்டிலிருந்த குழவிக் கல்லை எடுத்து தந்தையின் முன்னந்தலையில் அடித்துள்ளார். கீழே விழுந்த நந்தகோபால், பின்னந்தலையிலும் அடிபட்டு மரணம் அடைந்துள்ளார்.

 

இதனைக் கண்ட மகன் பிரபோத சந்திரன் தனது தந்தையை தானே அடித்துக் கொலை செய்துவிட்டதாக திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர், கொலை தொடர்பாக விசாரணை நடத்தி, மகன் பிரபோத சந்திரனை கைது செய்துள்ளனர். திருமணம் ஆகாத விரக்தியிலிருந்த மகன், சொத்துத் தகராறில் தந்தையைக் கொலைசெய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சிக்கு கலைஞர் நூலகம்; வலுக்கும் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Demand for an kalaignar library in Trichy

திருச்சியில் உள்ள மாவட்ட மைய நூலகம் மத்திய மாவட்டங்களில் மிகப்பெரிய பொது வாசிப்பு வசதியாக இருக்கலாம். ஆனால் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடமளிக்க போதுமான இடவசதி இல்லை. இந்த ஆர்வலர்கள் திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைக்கக் கோரி வளர்ந்து வரும் முழக்கத்தில் இணைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 142 நூலகங்கள் உள்ளன, மேலும் மேற்கு பவுல்வர்டு சாலையில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகம், வேலை தேடுபவர்களுக்குப் பார்க்கவும் தேர்வுக்குத் தயாராகவும் மிகப்பெரியது. சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 800 இளைஞர்கள் நூலகத்திற்கு வருகை தருகின்றனர், ஆனால் அதன் நடைபாதைகளிலும் பார்க்கிங் இடங்களிலும் அமர்ந்து படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 64 கிளைகள் மற்றும் 65 கிராம நூலகங்கள் உள்ளன, ஆனால் அவை மைய நூலகத்திற்கு நிகரான உட்கட்டமைப்பு இல்லை. மைய நூலகத்தின் இரண்டு தளங்களும் மொத்தம் 45,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருந்தாலும், பார்வையாளர்களின் உயரும் வருகையால் நூலகத்தில் அனைவரும் அமர்ந்து படிக்க முடியவில்லை.

நூலகத்தை தினசரி பயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட 50% பேர் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். பெண்கள் செய்தித்தாள் பிரிவு மற்றும் தரைத்தளத்தில் உள்ள நடைபாதைகளைப் பயன்படுத்துகின்றனர், ஆண்கள் முதல் தளத்தில் உள்ள குறிப்புப் பிரிவு மற்றும் அருகிலுள்ள நடைபாதைகளில் தயார் செய்கிறார்கள். TNPSC குரூப் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க இரண்டாவது தளம் பயன்படுத்தப்படுகிறது. “மதுரையில் உள்ள, கோவைக்கு முன்மொழியப்பட்ட கலைஞர் நூலக வசதி நமக்குத் தேவை. இத்தகைய வசதி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் உள்ள வளர்ச்சியடையாத பகுதிகளைச் சேர்ந்த UPSC மற்றும் TNPSC ஆர்வலர்களுக்கும் உதவும்" என்று NEET PG 2024 க்கு தயாராகும் செந்தில் குமார் கூறினார்.

சராசரியாக, ஒவ்வொரு வாரமும் மைய நூலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சித் திட்டம் மற்றும் மாதிரித் தேர்வுகள் மூலம் சுமார் 150 மாணவர்கள் பயனடைகின்றனர். “திருச்சிக்கு கலைஞர் நூலகத்தை பள்ளிக் கல்வித் துறை அனுமதிக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். வரும் தேர்தலில் கோரிக்கை வைப்போம்,'' என, திருச்சி Intra-City Development Endeavours (TIDES) உறுப்பினர் G.கனகராஜன் தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தற்போதுள்ள மைய நூலகம், மெயின் கார்ட் கேட் அருகே நகரின் முதன்மையான வணிகப் பகுதியில் அமைந்துள்ளதால், மேலும் விரிவாக்கம் செய்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. நிறைவுற்ற நூலகத்தில் சரியான பார்க்கிங் இடமும் இல்லை.

“அருகில் உள்ள மாவட்ட மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக நகரத்தில் வசிப்பதால், திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதைக்கு செயலில் உள்ள திட்டங்கள் எதுவும் இல்லை, எதிர்காலத்தில் நகரம் ஒன்றைப் பெறலாம் என நூலகத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story

திருச்சியில் 4 இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Rs 9 lakh confiscated at 4 places in Trichy

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.