Father and daughter lose their live in car collision while walking

மதுரை திருமங்கலம் அருகே கார் மோதி தந்தையும் மகளும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள முகமது ஷாபுரத்தைச் சேர்ந்தவர் துளசி நாதன். செல்போன் கோபுர பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் துளசிராமன் சர்வீஸ் சாலை பகுதியில் வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் 6 வயது மகள் சஷ்டிகாவும் அப்பா துளசிராமனுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

Advertisment

அப்பொழுது சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மெயின் சாலையில் இருந்துசர்வீஸ் சாலையில் நடந்து கொண்டிருந்த தந்தை, மகள் இருவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சஷ்டிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயங்களுடன் துளசிநாதன் மீட்கப்பட்டார்.

உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட துளசி ராமன் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி சஷ்டிகாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment