Skip to main content

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Farmers struggle demanding relief before Kottayam office!

 

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கற்பனை செல்வம் தலைமை தாங்கினார். விவசாயச் சங்க மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன்,  சிஐடியு ஆட்டோ வட்ட செயலாளர் விஜய், விதொச மாவட்ட பொருளாளர் செல்லையா, ஒன்றிய செயலாளர் மனோகரன், விவசாயிகள் சங்க கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் தர்மதுரை, பரங்கிப்பேட்டை கொளஞ்சியப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

 

2021ல் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பெரிய பட்டியலிலிருந்து சி.முட்லூர் வரை நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை உயர்த்தி வழங்க வேண்டும், சேதமடைந்த பயிர்களையும் முழு கணக்கெடுப்பு செய்து ஏக்கருக்கு ரூ20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கைகளை முன்மொழிந்து கோஷங்களை எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.