Skip to main content

சிறப்பு காப்பீடு திட்டத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும்;விவசாயிகள் கோரிக்கை

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் 17 ஆம் தேதி வேளாண்மை தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தில் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் என அனைவரது குடும்பமும் ஒரு விவசாயியோ அல்லது விவசாயக் கூலித்தொழிலாளரோ விபத்தில் சிக்கி உடல் ஊனமோ  அல்லது உயிரிழப்போ ஏற்படின் அவர்களது குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விடும் சூழல் உள்ளது. எனவே அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகிறது. எனவே தான் இந்நிலையைப் போக்க ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும் வகையில் சிறப்பு காப்பீடுத் திட்டம் கொண்டுவரப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Farmers demand special insurance scheme- Farmers demand!


இந்த திட்டம் ஒன்றே விவசாயிகளுக்கு நம்பிக்கையையும் தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் நம்மைக் காக்க அரசு இருக்கிறது என்ற பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும். எனவே இலாபகரமான நியாயமான விலை கிடைக்கவும் அடிப்படை ஆதார விலையினை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும். எளிதில் அழுகக்கூடிய பொருளான தக்காளி உள்ளிட்ட பொருட்களில் பழச்சாறு தயாரித்து விவசாயிகளுக்கு உதவிட அரசு நீரா பானத்துக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தில் இதற்கும் வழங்க வேண்டும். 

சிக்கிம் மாநிலம் போல் தமிழகத்தை முழு அளவில் இரசாயனமற்ற இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரசாயன பூச்சிக் கொல்லிகள் இல்லாத ஆரோக்கியமான இயற்கை வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்களை மருந்து பயன்படுத்தாத காய்கறிகளை உற்பத்தி செய்து நோயற்ற சமுதாயத்தை உருவாக்க தமிழக முதல்வர் அவர்கள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது” - கர்நாடக முதல்வர் திட்டவட்டம்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Karnataka  refusal to open water to Tamil Nadu

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

Next Story

சிறையில் சிக்கிய குட்டி செல்போன்; ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பரபரப்பு

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Little Cell Phone Trapped in Jail; The sensation in the Armstrong case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த கொலை சம்பந்தமாக தமிழக தலைமைச் செயலாளருக்கும், தமிழக டிஜிபிக்கும் தேசிய பழங்குடியினர் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகள் உள்ள சிறையில் செல்போன் கண்டுபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரல் அளவு கொண்ட செல்போனை பொறி வைத்து காவல் துறையினர் பிடித்துள்ளனர். பூவிருந்தவல்லியில் உள்ள தனிக் கிளைச் சிறையில் சிறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் லீ பிரிட்டோ காவலர்கள் குழுவுடன் சிறையில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது 1 வது ப்ளாக்கில் படிக்கட்டின் கீழே கை விரல் அளவே கொண்ட செல்போன், சிம் கார்டு, மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 3 பேட்டரி பறிமுதல் செய்தனர்.

Little Cell Phone Trapped in Jail; The sensation in the Armstrong case

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளராக பொறுப்பில் உள்ள ஜேம்ஸ் லீ பிரிட்டோ பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து கஞ்சா வழக்கில் கைதான மாறன் மற்றும் கொள்ளை வழக்கில் கைதான பாஸ்கர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உள்ள பூவிருந்தவல்லி தனிக் கிளைச் சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறையில் உள்ள 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.