Skip to main content

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயி விடுதலை!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

கடந்த 19.07.2019 அன்று காலை 7.35 மணியளவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மேலவிளாங்குடி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி பிள்ளையாருக்கு மிளகாய் வற்றலை படையலிட்டு மனு கொடுக்க அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் கிராம மக்களுடன் செல்லவிருந்த தகவலையறிந்த திருவையாறு டிஎஸ்பி பெரியண்ணா தலைமையில் தங்க சண்முகசுந்தரத்தை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

farmer


பின்னர் மாலையில் விடுவிப்பதாக கூறிவிட்டு திருச்சி மத்திய சிறைச்சாலை யில் 02.08.2019 வரை நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டார் அவர். இந்நிலையில் ஜாமினில் விடுதலை செய்ய கோரி திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில் இன்று 27.08.2019 சனிக்கிழமை மாலை திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருவையாறு காவல்நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தங்க சண்முகசுந்தரம் மாலை விடுவிக்கப்பட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
6 Rameswaram fishermen freed

ராமேஸ்வரம் மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருந்தனர். மேலும் அவர்களின் இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிக்கே வந்து சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த கைது சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய பிறகு கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் மீனவர்களின் இரு விசைப்படகுகளையும் நாட்டுடைமையாக்கி உத்தரவிட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கடலூரில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயிகள் கைது

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

farmers arrested cuddalore

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த எ.சித்தூரில் ஆருரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த  ஆலையில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கு உண்டான நிலுவைத் தொகையை பல ஆண்டுகளாக வழங்கவில்லை. மேலும் விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வாங்கிய கடனை  விவசாயிகள் செலுத்தவும் வங்கிகள் நிர்பந்தப்படுத்துகின்றன. 

 

இதையடுத்து கடந்த ஐந்து  ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் நிறுவன ஆலையை திறக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் பெற்ற வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எங்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இதனிடையே இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் வேறு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து ஆலையை வாங்கிய தனியார் நிறுவனம் தொழிற்சாலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

 

farmers arrested cuddalore

 

இந்நிலையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை முழுவதும்  வழங்கிய பின்புதான்,  ஆலையை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக கடந்த சில மாதங்களாக நடந்த பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வேப்பூரிலிருந்து நடைபயணமாக ஆலைக்கு சென்று உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதனால் கடலூர் எஸ்.பி சக்தி கணேஷ் தலைமையில்  வேப்பூர் பஸ் நிலையம், வேப்பூர் கூட்டு ரோடு, ஏ.சித்தூர் ஆருரான் சர்க்கரை ஆலை வாயில் என போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலர் சக்திவேல் தலைமையில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேப்பூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனையறிந்த கடலூர் மாவட்ட  எஸ்.பி சக்தி கணேஷ் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

 

அதில் முக்கிய நிர்வாகிகளிடம் ஆட்சியர் பழனி ஆலோசனை மேற்கொண்டார். இதனை ஏற்க மறுத்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறியதால் விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க  வைக்கப்பட்டனர். திருமண மண்டபத்தின் முன்பாக ஆலை நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.