/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_199.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் கொலைகாரன் குடியிருப்பு பழனியாண்டி மகன் சக்திவேல்(50). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
தினசரி தனது வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடுகளின் சாணங்களைச் சேகரித்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் இருக்கும்தனதுதோட்டத்திற்குக் கொண்டு சென்றபோது, நேற்று இரவு காற்றுடன் மழை பெய்தது. அப்போது தோட்டத்தின் வழியாக மரங்களுக்கு இடையில் சென்ற மின் கம்பிகளில் ஒரு மின் கம்பி அறுந்து கிடந்துள்ளதைக் கவனிக்காமல் சென்று, மின் கம்பியை மிதித்த விவசாயி சக்திவேல் மீது மின்சாரம் பாய்ந்தது. அதனால்துடிதுடித்துக் கிடந்தவரை அந்தப்பக்கம் வந்தவர்கள் மீட்டுப் பேராவூரணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.தோட்டத்திற்குச் சென்ற விவசாயி பலியான சம்பவம் அணவயல் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வடகாடு போலீசாரும், மின்வாரிய அதிகாரிகளும் விசாரணைசெய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)