Skip to main content

விவசாயி கொலையில் அண்ணன், தம்பி நீதிமன்றத்தில் சரண்; தந்தை கைது

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

 

farmer incident brothers attur court policeகெங்கவல்லி அருகே நிலத்தகராறில் விவசாயி கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன், தம்பி இருவரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 42). லாரி ஓட்டுநரான இவர், விவசாயமும் செய்து வந்தார். இவருடைய அத்தை பங்காரு (வயது 66). 

 

இவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் பொதுவாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சீனிவாசன் மட்டுமே ஏகபோகமாக அனுபவித்து வந்துள்ளார். பங்காருவின் பேரன்களான ரவிச்சந்திரனின் மகன்கள் மணிகண்டன் (வயது 31), விஜி (வயது 28) ஆகியோர் பொதுச்சொத்தில் சரிபாதியாகப் பங்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு சீனிவாசனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

 

கடந்த சில நாள்களுக்கு முன்பு, கடம்பூர் & பைத்தூர் சாலையில் சீனிவாசன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, அவரை மணிகண்டனும், விஜியும் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதையடுத்து ஆத்தூர் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவல்துறையினர் மணிகண்டன், விஜி மட்டுமின்றி அவர்களுடைய தந்தை ரவிச்சந்திரன் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். 

 

இந்நிலையில் ஜூலை 26- ஆம் தேதி, மணிகண்டனும், விஜியும் ஆத்தூர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர். நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில், இருவரையும் ஆத்தூர் கிளைச்சிறையில் 15 நாள்கள் காவலில் அடைத்தனர். 

 

இதற்கிடையே, அவர்களுடைய தந்தை ரவிச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

 

மேலும், சரணடைந்த கொலையாளிகள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆத்தூர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Ex-DMK MLA acquitted in case

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன். மெக்கானிக் தொழில் செய்து வந்த புவனேஸ்வரன் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மர்ம கும்பல் ஒன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நிலத்தகராறு தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் சையது இப்ராஹிம், செல்வம், முரளி உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் தூண்டுதலின் பேரில் தன்னுடைய மகன் கொலை செய்யப்பட்டதாகவும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அவருடைய பெயர் இல்லை எனவே இதை ரத்துசெய்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என புவனேஸ்வரனின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கையில் முரண்பாடுகள் இருப்பதால் அதனை ரத்து செய்து சிபிஐ விசாரணை நடத்த 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் பிறகு முறையாக விசாரணை செய்யப்பட்டு திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், சையது இப்ராஹிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம் உள்ளிட்ட 12 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் முன்னாள் எம்எல்ஏ உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிபதி கே.ரவி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மருத்துவரை 18 முறை அரிவாளால் வெட்டிய சம்பவம்; விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
A doctor was slashed 18 times with a sickle in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் ரதி (48). இவர், பஞ்ச்வதி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கைலாஷ் ரதி, கடந்த 23ஆம் தேதி அன்று இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது, அந்த மருத்துவமனைக்குள் அத்துமீறி ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்து, மறைந்திருந்து கைலாஷ் ரதியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கைலாஷ் ரதியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கைலாஷ், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள், அங்கு விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வருவதை உணர்ந்த அந்த நபர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கைலாஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தாக்குதல் நடத்திய அந்த நபர் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த முன்னாள் ஊழியரின் கணவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் முன்னாள் ஊழியர் 12 லட்ச ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததால் சமீபத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மனைவியை வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரமடைந்த கணவர், மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து மருத்துவரை அரிவாளால் 18 முறை சரமாரியாக வெட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.