Skip to main content

யானையை சுட்டுக்கொன்ற விவசாயி கைது

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Farmer arrested for shooting elephant

 

ஓசூர் அருகே காட்டு யானையை விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வனத்துறை கைது செய்துள்ளது.

 

ஓசூர் ஜவளிகிரி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியை சேர்ந்தவர் விவசாயி முதுமல்லேஷ். இவர் தனது விவசாய தோட்டத்தில் ராகி பயிரிட்டிருந்த நிலையில் காட்டு யானை ஒன்று வந்து அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அதிருப்தியில் இருந்த விவசாயி முதுமல்லேஷ், மீண்டும் தோட்டத்திற்கு வந்த காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். வனத்துறை நடத்திய விசாரணையில், தான்தான் யானையை சுட்டுக்கொன்றதாக விவசாயி முதுமல்லேஷ் வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஆந்திர அரசு மீது வழக்கு தொடர வேண்டும்.. ’ - தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
'A case should be filed against Andhra Govt..' - Tamilnadu farmers insist

ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டிகுப்பம் பகுதியில் அடிக்கல் நாட்டினார். இந்தத் தடுப்பணை ரூ.215 கோடியில் கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையின் மூலம், ஆந்திர அரசு 0.6 டி.எம்.சி. நீரை தேக்கிவைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த நீரினை குப்பம் தொகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு பூர்த்தி செய்யவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், ‘உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் 1892 மைசூர் ராஜ்ஜியம் மற்றும் சென்னை மாகாணம் இடையிலான நதிநீர் ஒப்பந்தத்தை மீறி அராஜக போக்குடன் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் விரைந்து தீர்ப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தனித்துவமாக செயல்படும் ஆந்திர அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசை வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்தனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் முல்லை மற்றும் அசோகன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆந்திர அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கூட்டமைப்பு சங்கங்கள் கலந்து கொண்டன.

Next Story

பைனான்ஸ் நிறுவன ஊழியர் விவசாயிகளிடம் மோசடி? விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Finance company employee fraud to farmers Order to investigate and take action

வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இங்கு வேலூர் அருகே உள்ள நஞ்சு கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 10 பேர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் மனுவை வழங்கினர். அந்த மனுவில், ‘தனியார் பைனான்ஸ் வங்கிகளில் லோன் பெற்று நாங்கள் டிராக்டர் வாங்கினோம். மாதாமாதம் கடன் கட்டிக்கொண்டு வந்தோம், பின்னர் எங்களால் லோன் கட்ட முடியவில்லை. கடன் தந்தவர்கள் எங்களுக்கு நெருக்கடி தந்துகொண்டு இருந்தனர்.

அப்போது பைனான்ஸ் நிறுவனத்தினர் எங்களுக்கு ஒருவரை அறிமுகப்படுத்தினர். அவர் உங்க லோன் பணத்தை நாங்களே கட்டித் தருகிறோம், நாங்கள் வண்டியை விற்று வங்கிக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டிவிட்டு மீதி பணம் தருகிறோம் என கூறி வண்டியை எடுத்து சென்றனர்.

தற்போது 3 மாத காலம் ஆகியும் பணத்தை தரவில்லை, வண்டியை விற்கவில்லை என்றால் எங்களது வண்டியை திருப்பித்தரவேண்டும் அதையும் செய்யவில்லை. வங்கி தரப்பு, வண்டி எடுத்துச்சென்றவர்களை தொடர்புகொண்டால் சரியாக பதில் தர மறுக்கிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன், மனு மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.