Skip to main content

இயற்கை ஆர்வலருக்கு மரியாதை செலுத்திய ’காலா’ ரசிகர்கள்

Published on 08/06/2018 | Edited on 08/06/2018

 

kala 1


 ரஜினி நடித்த காலா திரைப்படம் அரியலூர், ஜெயங்கொண்டம் நகரில் 2 திரையரங்குகளில் வெளியானது. பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படம் வெளியாகும்போது படப்பெட்டிகளுடன் ஊர்வலமாக தாரை, தப்பட்டை முழங்க வெடி, வெடித்து ஊர்வலமாக சென்று திரையரங்கிற்கு செல்வார்கள். ஆனால், அரியலூரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்களது தலைவரின் படம் வெளியானதை முன்னிட்டு வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர்.

 

அரியலூர் மாவட்டம், கல்லூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் முதியவர் கருப்பையா. இவர் தமிழகம் முழுவதும் நடைபயணமாக சென்று தனது கையால் விதையிடப்பட்டு வளர்த்த செடிகளை காணும் இடங்களில் எல்லாம் வளர்த்து வருபவர். கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 3லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டுள்ளார். இதற்காக யாரிடமும் ஒரு பைசாகூட பெற்றுக்கொண்டதில்லை.

 

இத்தகைய பெருமை வாய்ந்த இயற்கை ஆர்வலர் கருப்பையா அவர்களை அரியலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பாகவும், அரியலூர் மகாசக்தி திரையரங்க நிர்வாகத்தின் சார்பாகவும் காலா திரைப்படம் வெளியான மகாசக்தி திரையரங்கத்திற்கு வரவழைத்து சால்வை அணிவித்து தங்களுடன் காலா திரைப்படம் பார்ப்பதற்கு அழைத்து சென்றனர். திரைப்படம், அரசியல் என்பதனை தாண்டி இயற்கை ஆர்வலுருக்கு ரசிகர்கள் மரியாதை செலுத்திய இந்நிகழ்வினை பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் காலமான ரசிகர் - வீட்டிற்கு சென்று சூர்யா அஞ்சலி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
suriya paid tribute to his fan passed away

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். இம்மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாணு தயாரிப்பில் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இந்தியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ‘கர்ணா’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

திரைப்படங்களை தாண்டி தனது ரசிகர்கள் அல்லது ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் யாரேனும் மறைந்தால் அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் சூர்யா. கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில், வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் இறந்துள்ளார். இவர் தீவிர சூர்யா ரசிகர் எனத் தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தைச் சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தினார் சூர்யா.

அதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சூர்யாவின் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் சூர்யா தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கான தேவைகளை செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரழந்தார். இவர் தீவிர சூர்யா ரசிகராகவும் சூர்யாவின் ரசிகர் மன்றத்திலும் உறுப்பினராகவும் இருந்துள்ளதையறிந்த சூர்யா எண்ணூரில் உள்ள அந்த ரசிகரின் இல்லத்திற்குச் சென்று அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவரான மணிகண்டன் கடந்த 7ஆம் தேதி சாலை விபத்தில் மறைந்துள்ளார். இதனால் அவரின் வீட்டிற்குச் சென்ற சூர்யா, மணிகண்டன் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Next Story

படம் பார்க்க வந்தவர்களுக்கு முழுக் கரும்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
captain miller fans celebrations

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகியுள்ளது. 

தனுஷ் ரசிகர்கள் காலை முதலே சென்னை மற்றும் புதுச்சேரியில் பல திரையரங்குகளில் பேனர் வைத்து, அதற்கு பால் அபிஷேகம் செய்து, பின்பு வெடி வெடித்து கொண்டாடினர். சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வந்து தனுஷின் இரு மகன்களும் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர். இதனிடையே கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்க வந்த பார்வையாளர்களுக்கு, முழு கரும்பு வழங்கி கொண்டாடினர் தனுஷ் ரசிகர்கள்.  

இதே போல் புதுச்சேரியில் உள்ள திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள், பேனருக்கு பால் அபிஷேகம் செய்ததுடன், 108 தேங்காய் உடைத்து கொண்டாடினர். மேலும் சாலையில் சென்ற பொது மக்களுக்கு கரும்பு வழங்கினர்.  இது அப்பகுதியில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.