Fans happy to see Rajini on New Year's Day!

Advertisment

ஆங்கில புத்தாண்டையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார். வேட்டி, சட்டையுடன் இல்லத்தில் இருந்து வெளியே வந்த நடிகர்ரஜினிகாந்தைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.