
சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்குச் சென்ற நடிகர் சூர்யாஅவரது குடும்பத்தினரிடம் கண்ணீர் விட்டு ஆறுதல் சொல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் படமொன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே 'அகரம் அறக்கட்டளை' மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாக சூர்யா ரசிகர் மன்றத்தில் நாமக்கல் மாவட்ட கிழக்கு செயலாளராகவும், 15 வருடங்களாக நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றத்தில் இயங்கி வந்தவருமான ஜெகதீசன் என்பவர் கடந்த 21 ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த தகவலைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா அவரின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கண்ணீர் விட்டு ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)