Skip to main content

மதுக்கடைகள் திறப்பால் மனமுடைந்த குடும்ப பெண்கள், மறுபரிசீலனை செய்து திரும்ப பெறுக -பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

Published on 05/05/2020 | Edited on 05/05/2020


கரோனா அச்சத்தில் நாடே தவிக்கும்போது டாஸ்மாக் கடையை திறக்க தமிழக அரசு துடிக்கிறது. இது குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழகம் இந்தியாவில் கரோனா தொற்று தாக்குதலில் 2ம் இடத்தில் முதல் கட்ட பரவல் தீவிரமடைந்தது. தமிழக அரசும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சியால் 6,7 வது இடத்திற்கு சென்றது. தமிழக அரசோடு மக்களும் இணைந்து மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளால் கரோனாவிற்கு மருத்துவமே இல்லாத நிலையில், சமூக இடைவெளியும், தங்களை விடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டதுமேதான் நோய் தொற்று குறைவதற்கு காரணமாக அமைந்தது.

 

 

Family women who are disheartened by the opening of the bar, review and return -PR Pandian Request


மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் குடிக்காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு காவல்துறை கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் துவங்கி கரோனா தொற்று தீவிரவேகமாக பரவி வருவதோடு பெரும் பேரபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து குறிப்பாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2ம் கட்டமாக தீவிரமடைந்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் மதுக்கடைகளை தமிழகம் முழுவதும் திறக்க அனுமதித்ததின் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத பேராபத்து ஏற்பட்டுள்ளது. குடிக்காரர்களின் குடும்பங்களை சார்ந்த பெண்கள் தனது வருவாயை வைத்து பிள்ளைகளின் உயிரை கரோனா தொற்றிலிருந்து பாதுக்காத்து வருகின்றனர். தற்போது மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளதால் மதுக்குடித்துவிட்டு வீட்டுக்கு வரப்போகும் கணவன்களால் குடும்பமே கரோனா தொற்று ஏற்பட்டு அழிந்து விடுமோ? என்று பெண்கள் மனமுடைந்து பரிதவிக்கின்றனர்.

தற்போது சென்னையில் நோய் தொற்றின் தாக்கத்தை உணர்ந்து மது விற்பனைக்கு தடை விதித்துள்ளதாக வந்துள்ள தகவல் ஆறுதல் அளிக்கிறது. அதே நேரம் கடந்த 3 நாட்களாக சென்னை மக்கள் தொகையை மற்ற மாவட்டங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னைக்கு இணையாகவே தெரிகிறது.

 


உண்மை நிலை இவ்வாறு இருக்க சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதியளித்துப்பது கிராமப்புறங்களிலும் நோய் தொற்றால் பேரழிவு ஏற்படும் என்பதை உணர்ந்து சிவப்பு, ஆரஞ்சு நிற கரோனா பாதிப்பு மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறப்பதை தமிழக முதலமைச்சர் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன் எனக்கூறியுள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.