false complaint; BJP Celebrity prosecution

கோவை மாவட்டம் அன்னூர் சொக்கம் பாளையத்தைச்சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக பிரமுகரான இவரது வீட்டில் கடந்த 18 ஆம் தேதி (18.05.2024) ரூ.1.5 கோடி பணம், 9 பவுன் தங்க நகைகளும் கொள்ளை போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணை, சிசிடிவி கேமரா, கொள்ளையர்கள் பயன்படுத்திய வழித்தடம் உள்ளிட்டவற்றை சோதனை செய்த போது திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த அன்பரசன் என்பவர் சோமனூரில் தங்கி இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இந்தக்கொள்ளை சம்பவம் தொடர்பாக அன்பரசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரூ.18 லட்சம் மட்டுமே அவர் கொள்ளை அடித்ததாக கூறியுள்ளார்.

false complaint; BJP Celebrity prosecution

Advertisment

இதனால் சந்தேகமடைந்த போலீசார் மீண்டும் விஜயகுமாரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரூ.18 லட்சம் கொள்ளை போனதை ஒப்புக்கொண்டார். மேலும்பெரும் தொகை திருடுபோனதாக புகார் அளித்தால்தான் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கருதி பொய்யாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது குறித்து தகவலறிந்தகோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பத்ரி நாராயணன் பொய்யாக காவல் நிலையத்தில் தகவல் அளித்த விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.