Skip to main content

முகக் கவசம்.... நீலகிரி ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

face mask

 

நீலகிரியில் கரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை இருந்தது. அதனால் பச்சை மண்டலமாக நீலகிரி வெகு காலம் பெயரைத் தக்கவைத்து இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறி கரோனாவால் மலையே நடுங்குகிறது. வெளி மாவட்ட ஆட்கள் நுழைவது பெரிய கடினம் என்கிற நிலையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா செயல்படுகிறார்.

 

இந்த நிலையில் இப்போது புது உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இல்லையென்றால் ஆறு மாதச் சிறைத் தண்டனை கொடுக்கப்படும் என்கிற உத்தரவு தான் அது. 

 

என்னடா அநியாயம்? என்று நீலகிரி மக்கள் முணு முணுத்தாலும், கரோனா பாதிப்பில் நீலகிரி எந்த அளவுக்கு சிக்கலில் இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவே இப்படி ஒரு கடுமையான உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறார் என்கிறார்கள் கலெக்டர் அலுவலகத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பிச்சவாரத்தில் படகு சவாரி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Boat ride canceled in Bichhiwara due to rain

 

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நில காடுகளுக்கு இடையே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

 

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பிச்சாவரம் படகு இல்லத்தில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். எனவே சுற்றுலாப் பயணிகள் பிச்சவாரத்திற்கு வந்து படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.