Skip to main content

அதீத வேகம்; மிதமிஞ்சிய போதை; கால்வாயில் பல்டி அடித்த கார்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

extreme speed; Excessive intoxication; The car crashed into the canal

 

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மது போதையில் காரை இயக்கிய நிலையில் சாலையோர கால்வாய்க்குள் கார் விழுந்து மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கால்வாய் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆவடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் காஞ்சிபுரத்தில் இருந்து கார் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தார். கார் ஓட்டிய அந்த இளைஞர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த கால்வாய்க்குள் விழுந்தது. கார் காட்டுப்பாட்டை இழந்த உடனே காரில் இருந்த அனைவரும் கீழே குதித்து விட்டனர். கார் மட்டும் கால்வாய்க்குள் விழுந்து மூழ்கியது. உடனடியாக அங்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ஜேசிபியை வைத்து காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணிநேர போராட்டத்திற்கு பின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளே கிடந்த கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டிய அர்ஜுன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாமண்டூரில் பழைய கற்கால ஆயுதம் கண்டெடுப்பு

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Paleolithic weapon discovery at Mamandur

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை மேற்பார்வையில் இயங்கும் தொல்லியல் கழகம், விழுப்புரம் உமா கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து, காஞ்சி சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஐந்து நாட்கள் கல்வெட்டு பயிலரங்கம்  தமிழ்த்துறை தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

பயிலரங்கத்தின் கடைசி நாளில் திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் மற்றும் கூழமந்தல் ஆகிய ஊர்களுக்கு கல்வெட்டு பயிற்சியில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என  சுமார் 40 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள், காஞ்சிபுரம் மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் ஆகியோர்  களப்பயணம் மேற்கொண்டனர்.

Paleolithic weapon discovery at Mamandur

மாமண்டூர் குடைவரையில் களப்பயணம் மேற்கொண்டபோது 4-வது ஆக உள்ள குடைவரையை பார்வையிட்டு கீழே இறங்கும் போது மலை அருகே கற்கால கருவி ஒன்றை  கல்வெட்டு பயிலரங்கத்தில் கலந்து கொண்ட விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் இம்மானுவேல் கண்டறிந்தார். இதனை ஆய்வு செய்ததில் அவை பழைய கற்கால கருவி என தெரியவந்தது என அவர் தெரிவித்தார்.

குடைவரைக்கு பின் பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் திட்டைகளும் உள்ளன எனவே இந்த ஆதாரங்கள்  மூலம் அப்பகுதியில் பழைய கற்கால மனிதன் வாழ்ந்திருக்கலாம் என அறிய முடிகிறது என்று கூறினார்.

Next Story

மோதி விட்டு நிற்காமல் பறந்த கார்; பஞ்சராகி பாதி வழியில் நின்றபோது பறிமுதல்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
A car that caused an accident and did not stop

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள சருக்கலக்கோட்டை மற்றும் குருந்திரகோட்டை கிராமங்களைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரு பைக்கில் கீரமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பனங்குளம் தெற்கு கிராமத்தில் அருகே திருவாரூர் மாவட்டம் முன்னாவல்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் தனபாண்டி (வயது 24) அறந்தாங்கி நோக்கி ஓட்டிச் சென்ற கார் எதிரே வந்த சிறுவர்களின் பைக் மீது மோதிய விபத்தில் 3 சிறுவர்களும் படுகாயமடைந்தனர்.

ஆனால் விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிறுத்தாமல் வேகமாகச் சென்று விட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் ரத்த காயங்களுடன் கிடந்த 3 சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவர்களின் பைக் மீது மோதி நிற்காமல் தப்பிச் சென்ற கார் ஒரு கி.மீ தூரத்தில் குளமங்கலம் தெற்கு பகுதியில் பஞ்சராகி நின்றுவிட்டது. தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீசார் பஞ்சராகி நின்ற காருக்கு மாற்று டயர் மாற்றி காரை கைப்பற்றி கீரமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.