/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a354.jpg)
ரயிலில் தேநீரில் மயக்க மருந்து கொடுத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் சத்ரபதி சிவாஜி எக்ஸ்பிரஸ் ரயில் (16351)நேற்றுகாலை அதிகாலை 3 மணி அளவில் சோலாப்பூர் எனும் பகுதிக்குவந்தது. அப்பொழுது ரயிலில் சக பயணி ஒருவர் தேநீர் வாங்கி தந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் தேநீர் வாங்கி அருந்தியஇருவர் சுயநினைவை இழந்ததாகக் கூறுகின்றனர்.
பின்னர் இருவரிடம்இருந்தும்நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ரயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு மாலை 4 மணியளவில் வந்தபோதே மற்றொரு சகப்பயணி ஒருவர் மயக்க நிலையில் இருந்ததை ரயில்வே துறையிடம் தெரிவித்தனர். தகவலின்படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மயக்க நிலையில் இருந்த தமிழ்ச்செல்வி (54), ரோனிகா மேரி (58) ஆகியோரிடம் விசாரித்தனர். இருவரும்விருத்தாசலம் அடுத்த மதியனூர் எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள்என்பது தெரியவந்தது.
இவர்கள் மும்பையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வரும் வழியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரையும் மீட்டு காவல்துறையினர் அரக்கோணம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)