Skip to main content

Exclusive: சக்தி பள்ளி ரவிக்குமாருக்கு சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு!!

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

Exclusive: Shakti Palli's Supreme Court gave a wedge to Ravikumar!!

 

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மரணம் அடைந்தது தொடர்பாக அந்தப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவி சாந்தி மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் ஜாமீனில் வெளிவந்தார்கள்.

 

அந்த ஜாமீன் விடுதலையை எதிர்த்து மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரையும் அவரது மனைவி சாந்தியையும் போக்ஸோ வழக்கில் கைது செய்யாமல் சாதாரண வழக்கில் கைது செய்து அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

அந்த வழக்கில் செல்வி தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி வாதாடினார். ‘கனியாமூர் சக்தி பள்ளி விவகாரத்தில் ஒருதலைபட்சமாக தமிழக போலீசாரும் சென்னை உயர்நீதிமன்றமும் நடந்து கொண்டார்கள். எனவே குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என வழக்கறிஞர் சங்கரசுப்புவும் மற்ற சீனியர் வழக்கறிஞர்களும் வாதாடினார்கள். 

 

இந்த வாதத்தைக் கேட்ட சுப்ரீம் கோர்ட், ‘உங்களுக்கு ஏன் ஜாமீன் ரத்து செய்யக்கூடாது’ எனப் பதில் அளிக்குமாறு குற்றவாளிகள் 5 பேருக்கும் சிபிசிஐடி காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டது. 

 

ஸ்ரீமதி வழக்கில் இது ஒரு பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு குற்றவாளிகளின் ஜாமீனிற்கு எதிராக அப்பீல் செய்யவில்லை. பொதுவாக அரசு செய்யும் அப்பீலைத்தான் உச்சநீதிமன்றம் சீரியஸாக எடுத்துக்கொள்ளும். அரசு அப்பீலே இல்லாமல் ஸ்ரீமதியின் தாயார் செய்த அப்பீலை சீரியசாக எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றம் குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது இந்த வழக்கில் போலீஸ் தரப்பு மேற்கொண்ட முரண்பாடான அணுகுமுறைக்கு எதிர் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுத்தை நடமாட்டம்; தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Leopard movement; Holiday announcement for private school

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் நேற்று (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கோவையில் இருந்து தனிப்படை ஒன்று விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செம்மங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (03.04.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் கைது

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Principal of private school arrested in pocso

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வந்த தனியார் பள்ளியின் முதல்வர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி அடுத்த ரெட்டணை பகுதியில் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் பெற்றோர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி புகார் அளித்திருந்தனர். அதேபோல் மற்றொரு மாணவியும் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த வழக்கு விசாரணையில் மேலும் பல பள்ளி மாணவிகளுக்கு கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை இன்று விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த தயாராகி உள்ளனர்.