Skip to main content

சாலை மறியல் செய்த முன்னாள் ராணுவ வீரர்கள்!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

 Ex-servicemen who blocked the road!

 

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் ரெட்டியார் மில் பஸ் ஸ்டாப் அருகே ராணுவ வீரர்களுக்காகன வணிக அங்காடி உள்ளது. இந்த அங்காடியில் முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.

 

சமீப காலங்களாக, இந்த அங்காடியில் சரியான முறையில், தேவையான அளவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதேபோன்று இங்கு பொருட்கள் வாங்க வரும், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, பொருட்கள் இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள். இதுகுறித்து, அவர்கள் கேட்கும் தகவல்களுக்கும் பொறுப்பான முறையில் பதில் சொல்லாமல் அலட்சியம் செய்து மெத்தனமாக இருந்துள்ளனர்.

 

இந்நிலையில் நேற்று ராணுவ வீரர்கள் சுமார் 30 -க்கும் மேற்பட்டவர்கள், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க அங்காடிக்கு வந்துள்ளனர். நேற்றும் அவர்கள் கேட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்று பதில் கூறியுள்ளனர். இதே போன்று பல மாதங்களாக அங்காடியில் பொருட்கள் இல்லை என்றே பதில் கூறுகிறீர்கள், இதற்குக் என்ன காரணம் என்று கேட்டுள்ளனர். அதற்கு அங்கு பணி செய்த ஊழியர்கள், சரியான பதில் சொல்லாமல் அலட்சியம் செய்துள்ளனர்.

 

இதனால், ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் விழுப்புரம்-புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதுகுறித்து, தகவல் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.