Ex-minister Vijayabaskar asset transfer case adjourned to January 6

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைநடந்து வருகிறது.

Advertisment

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் வேண்டும் என்று சில விசாரணை நாட்கள் சென்ற நிலையில்,கடந்த 2 வாய்தாவிற்கு முன்பு சுமார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட சொத்து ஆவண நகல்கள் விஜயபாஸ்கர் தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று புதன்கிழமை விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் ஆஜரான நிலையில், அடுத்த வாய்தாவின் போது வழக்கு விசாரணைசெய்யலாம் என்று கேட்கப்பட்டதால், அடுத்த வாய்தா ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisment