Skip to main content

'ஒரு நாளைக்கு 83 ரூபாயை வைத்து எந்த அமைச்சர் சமாளிப்பார்?'-கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் கேள்வி!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020
Which minister will cope with 83 rupees a day?' - Communist MP Subramanian question

 

தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 66,130 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மைப் காவலர்களாக பணி செய்கின்றனர். இவர்களது ஊதியத்தை மாதம் 2,600 ரூபாயிலிருந்து 3,600 ரூபாயாகவும் டேங்க் ஆப்பரேட்டர் ஊதியம் 2,600 ரூபாயிலிருந்து 4 ஆயிரமாகவும், உயர்த்தி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டும் இன்று வரை அந்த உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை.

இதை அமல்படுத்தக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 28ந் தேதி புதன் கிழமையன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்று அச்சங்கம் அறிவிப்பு செய்திருந்தது. இதை கைவிடக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ கவிதா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் 28ந் தேதி திட்டமிட்டபடி  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யூ.சி மாநில தலைவரும், திருப்பூர் எம்பியுமான சுப்பராயன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. சங்கத்தின் துணை தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். இதில் ஈரோடு ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி, திமுக மாநகரச் செயலாளர் சுப்பிரமணி,  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொறுப்பாளர் சுப்பு, குணசேகரன் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம்  மனு கொடுத்தனர். முன்னதாக திருப்பூர் சுப்பராயன் செய்தியாளர்களிடம் பேசும்போது,

 

Which minister will cope with 83 rupees a day?' - Communist MP Subramanian question



தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 527 ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களது ஒரு நாள் சம்பளம் 83 ரூபாய்தான். இதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும். இந்த 83 ரூபாய்யை வைத்து அமைச்சர்களால் ஒரு நாளை சமாளிக்க முடியுமா? தூய்மை பாதுகாவலர்கள் சுடுகாட்டு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். நமது ஈரோடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் பணி புரிகின்றனர். தமிழக சட்டசபையில் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தி அறிவித்தனர். அந்த அறிவிப்பு என்னவாச்சு. உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் இதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.