Skip to main content

வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்; விபரீத முடிவெடுத்த சோகம்

 

erode palayapalayam nearest woman issue police investigation started 

 

ஈரோடு மாவட்டம் பழையபாளையம், இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி லோகநாயகி (வயது 42). கடந்த சில வருடங்களாகவே லோகநாயகி வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

 

இருந்தாலும் வயிற்று வலி குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. வயிற்று வலியால் வாழ்வதை விட இறந்துவிடலாம் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் அடிக்கடி அவர் கூறி வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு அவரது குடும்பத்தினர் மற்றும்  உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த துரைசாமி கதவைத் தட்டி உள்ளார். ஆனால் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது லோகநாயகி வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு  அதிர்ச்சி அடைந்தார்.

 

அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று லோக நாயகியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே லோகநாயகி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !