Skip to main content

அ.தி.மு.க. வெற்றி அறிவிப்பு... பகிரங்கமான முறைகேடு..!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

அமைச்சர்கள் உத்தரவுக்கு அடிபணிந்து வாக்களித்த மக்களை வெளிப்படையாகவே முட்டாளாக்கியுள்ளார்கள் ஈரோடு மாவட்ட அதிகாரிகள். இல்லையென்றால் மொத்த எண்ணிக்கை 10 ல் 7 பெரிதா? 3 பெரிதா? என்ற கணக்கில் 3 தான் பெரிது என குமாரசாமி கணக்கு போல் அறிவித்திருப்பார்களா?

 

Erode local body election - admk - dmk issue

 



இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினரை அராஜகத்தால் நிறுத்தப்பட்டு, அடுத்து சென்ற ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது. அதிலேயும் ஆளுங்கட்சி அதிமுகவினர் அதிகார துஷ்பிரயோகம்  செய்ததால் பல இடங்களில் மீண்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. அப்படி ஒன்றுதான் ஈரோடு மாவட்டம் தூக்க நாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவருக்கான தேர்தல்.  இந்த தூக்கநாயக்கன் பாளையம் யூனியன் கவுன்சிலர்கள் மொத்தம் 10 பேர். இதில் அதிமுக மூன்று பேர் வெற்றி பெற்றிருந்தனர். திமுக உறுப்பினர்கள் ஆறு பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றி பெற்றிருந்தார். ஆக திமுக கூட்டணி 7 பேர் அதிமுக 3 பேர் என்ற நிலை இருந்தது. 

முதன் முதலாக தலைவர் பதவி தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 1வது வார்டு கவுன்சிலர் நடராஜ் என்பவர் வாக்களிக்கும் மையத்தில் திமுக உறுப்பினர்களை தாக்கியதோடு தேர்தல் அதிகாரி வசமிருந்த வாக்குச்சீட்டுகளை கிழித்து எறிந்தது அந்த வாக்குப் பெட்டியையும் தூக்கி கொண்டு ஓடிவிட்டார். இதனால் அப்போது தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தேர்தலில் மீண்டும் இவர்கள் வன்முறை செய்வார்கள் என திமுக கூட்டணி ஏழு பேரும் எங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் தேர்தலை நியாயமாக நடக்கும் தேர்தல் அதிகாரி வேண்டுமென தேர்தலைப் புறக்கணித்தனர். 

இதனால் தேர்தல் நிறுத்தப்பட்டது. பிறகு இன்று நான்காம் தேதி காலை தேர்தல் நடைபெற்றது. பத்து கவுன்சிலர்களும் வாக்களிக்கும் மையத்திற்கு வந்தனர். அப்போது அதிமுக சார்பில் விஜயலட்சுமி என்பவரும் திமுக சார்பில் ஆசீர்வாதம் என்கிற கவுன்சிலரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக அரசு அதிகாரி பொன்னம்பலம் என்பவர் இருந்தார். 10 பேரும் வாக்களித்த நிலையில் இறுதியாக வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்குகள் எண்ணப்பட்டது என்பதைவிட அந்த வாக்குச்சீட்டுகளை அப்படியே எடுத்த தேர்தல் அதிகாரியான பொன்னம்பலம் அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயலட்சுமி 6 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக திடீரென அறிவித்தார். 

உள்ளே இருந்த திமுக கவுன்சிலர்கள் 7 பேரும் பதறிப்போய் நாங்கள் ஏழு பேர் எங்கள் அணிக்கு ஓட்டு போட்டோம். எப்படி நீங்கள் வாக்கு படிவங்களை பார்க்காமலேயே சொல்கிறீர்கள் என பேசிக்கொண்டே இருக்கும்போது தேர்தல் முடிந்தது முடிவுகள் அறிவிக்கப்பட்டது என கூறிய தேர்தல் அதிகாரி பொன்னம்பலம் அங்கிருந்த வேறு அறைக்குள் சென்றுவிட்டார். அடுத்து போலீசார் உள்ளே வந்து திமுக கவுன்சிலர்களை சூழ்ந்து நின்று விட்டனர். 

இதனால் கோபமுற்ற திமுக கவுன்சிலர்கள் என்ன கொடுமை 7 பேர் இருந்தும் எங்களை வெற்றி பெற்றதாக அறிவிக்காமல் மூன்று பேர் மட்டுமே இருக்கும் அவர்களை  வெற்றி பெற்றதாக எப்படி அறிவிக்க முடியும். இது  பட்டவர்த்தனமாக வெளிப்படையான முறைகேடு. இதை அரசு அதிகாரிகளே செய்திருப்பது சட்டவிரோதம் என கண்டன கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் நூற்றுக்கணக்கான போலீசார் சூழ்ந்து நின்றனர். திமுக கவுன்சிலர்கள் மற்றும் அங்கிருந்து திமுகவினரை சாலை மறியல் செய்ய அவர்களை பலவந்தமாக சாலையிலிருந்து விரட்டிவிட்டனர். வெளிப்படையாகவே இப்படி ஒரு தேர்தல் நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

ஏன் அதிகாரிகள் இப்படி அதிமுகவுக்கு சார்பாக நடந்துள்ளார்கள் என விசாரித்தபோது "அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகிய இருவருமே தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் அதிமுக வசம் தான் இருக்க வேண்டும். தேர்தல் நடந்தாலும் அதிமுக தான் அங்க தலைவராக இருக்கவேண்டும் அதற்கு அதிகாரிகள் என்ன செய்வீர்களோ தெரியாது. தேர்தல் முடிவை அதிமுக வெற்றியாக அறிவியுங்கள் என கூறியுள்ளனர்" என்ற தகவல் கிடைத்தது.  அதற்கற்காகவே கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்த யூனியனின் அதிகாரியாக இருக்கும் பொன்னம்பலத்தை தேர்தலில் போட்டு இதை நடத்தி உள்ளார்கள். தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வருகிறது. இதற்காகவே அதிகாரிகளும் இப்படி ஒரு பகிரங்க முறைகேட்டை நடத்தி முடித்துள்ளார்கள்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர்.