Skip to main content

“எனக்கு அவமானமா இருக்கு”... சித்தியுடன் கூடா நட்பில் இருந்தவரைக் கொலை செய்த வாலிபர்!

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

erode district incident police investigation

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ளது விண்ணப்பள்ளி என்ற ஊர். இதற்கு அருகே உள்ள அன்ன கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (32 வயது). இவர் வேன் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் அல்லிமுத்து (31 வயது). கூலித் தொழிலாளி, இவருக்கும் திருமணமாகவில்லை. அல்லிமுத்துவின் சித்தியான சீதா (50) (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  அந்தப் பகுதியில் வசித்து வருகிறார். 

 

இந்த நிலையில், மகேந்திரனுக்கும் சீதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது. மகேந்திரனுக்கும், சீதாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் குறித்து அல்லிமுத்துக்கு தெரியவந்தது. அவர் மகேந்திரனை தகாத உறவைக் கைவிடுமாறு தொடர்ந்து கண்டித்துள்ளார். ஆனால், மகேந்திரன் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் (01/02/2021) இரவு மகேந்திரன் சீதா வீட்டிற்குச் சென்றார். அப்போது அங்கு வந்த அல்லிமுத்து, ‘உன்னால எனக்கு அவமானமா இருக்கு’ என மகேந்திரனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த அல்லிமுத்து மகேந்திரனை கையால் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து மகேந்திரன் அருகிலிருந்த சமுதாயக் கூட திண்ணையில் அப்படியே மயங்கி விழுந்து, சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். 

 

இதைக் கண்ட அல்லிமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்குத் தகவல் செல்ல, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகேந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், தப்பி ஓடிய அல்லிமுத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

 

தன்னை போலீஸ் தேடுவதை அறிந்த அல்லிமுத்து, விண்ணப்பள்ளி கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அல்லிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

 

தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் வேன் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.