Skip to main content

எட்டி நின்ற எடப்பாடி... மூடவுட்டில் மோடி...

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

நேற்று தமிழகத்தின் அதுவும் மதுரையில் காலையில் இருந்தே ஆங்காங்கே வைகோ திருமுருகன் காந்தி போன்றோர் பெரியார் நிலையத்தின் முன் சாலை மறியல் கருப்பு கொடி காட்ட பெரும் திரளாக திரண்டு மறியல் செய்து கைதாக பெரியார் திராவிடகழகம் மற்றும் முகிலன் போன்றோர் பாஜக கொடி எரிப்பு மற்றும் தமிழ்நேசன் என்பவர் 20 எருமைமாட்டை ஓட்டிவந்து இதை கைது பண்ணுங்க என்று வர..

 

modi

 

 மதுரையே மோடி எதிர்ப்பு கடுமையான உச்சகட்டத்திற்க்கு போக. விழா நடக்கும் இடத்தில் போலிஸார் மிகுந்த கெடுபிடியை கொடுத்து பாஜக தொண்டர்கள் போர்வையில் யாரும் கருப்புகொடி காட்டிவிடுவார்களோ என்ற பதபதப்பில் அனைவரையுமே ஒவ்வொருவராக சோதனை செய்து உள்ளே அனுப்பிகொண்டிருந்தனர்...கருப்பு கொடி எதிர்புகளுக்கு மத்தியில் கட்டாயம் அரசியல் பேசுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கபட்ட நேரத்தில்

 

modi

 

இதற்கிடையில் மதுரை தோப்பூரில்1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டவருகிறார் என்று கடந்த இரண்டுவாரமாக பாஜகவினர் இந்த முறை கூட்டத்தை எப்படியாவது கூட்டி காட்டவேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு  ஏர்போர்ட் அருகிலேயே நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களை திரட்டி ஒருவழியாக ஜனவரி 27 அன்று காலை 12 மணிக்கு உச்சிவெயிலில் கூட்டம் போடபட்டிருந்து. தமிழிசை 2 லட்சம் பேர் கூடுவார்கள் என்று சொல்லியிருந்த நிலையில்  5000 நார்காலியில் ஒருவழியாக 90% பேரை நிரப்பிருந்தனர். அதுவும் மார்வாடிகளும் சவ்ராஸ்ட்ரா சமூகத்தினர்கள்தான் அதிகம் தென்பட்டனர். முதலில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு மோடி மேடைக்கு வர தொடக்கமாக பாடப்படும் ”தமிழ்தாய் வாழ்த்து பாடாமலயே நிகழ்ச்சி தொடங்கியது.”.

 

modi

 

தமிழக முதல்வர்,துணைமுதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் வரவேற்க  மத்திய அரசை தொடர்ச்சியாக விமர்ச்சித்து வரும் தம்பிதுரைக்கு மேடையில் கவர்னருக்கு அருகில் உட்கார சொன்ன முதல்வர் புரோட்டோகால் படி தம்பிதுரை பேச இருந்த நிலையில், ஏனோ அவரை பேசவாய்ப்பளிக்கவில்லை.

 

முதல்வர் ஜெயலலிதா எண்ணப்படி எய்ம்ஸ் கொண்டுவந்ததற்கு பிரதமருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதனால் தென்மாவட்ட மக்கள் பெரிதும் பயன்படுவார்கள். சுகாதாரதுறையில் இந்தியாவில் தமிழகம்தான் முன்னோடியாக இருக்கிறது என்று மட்டும் பேசிவிட்டு எந்தவித அரசியலும் பேசாமல் உட்கார

அடுத்து   மோடி உலகதரவாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என  பேசி முடிந்த நிலையில்  அவருக்கு  அருகில் சென்ற தம்பிதுரை சென்று கைகொடுக்க வர ஏனோ மோடி திரும்பி கொண்டார்.. 

 

 

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு அவருக்குப் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மீனாட்சி அம்மன் நினைவுச் சின்னம் வழங்கினர்.

 

modi

 

தமிழிசை கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டே இருந்தார். அவர் மேடைக்கு வரும் போது அனைவரும் வணக்கம் வைக்க ஹச்.ராஜா மட்டும் கண்டுகொள்ளாமல் இருந்தார். மைக்கை பிடித்த தமிழிசை ”இங்கு காவி ரத்தம் பாச்சப்படுகிறது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தேதீருவார். நான் என் உயிரை கொடுத்தாவது மீண்டும் பிரதமராக்குவேன்” என்று பேசி கொண்டு இருக்கும்போது ஹச்.ராஜா சி.பி. ராதாகிருஷ்ணனிடம் சீக்கிரம் முடிக்க சொல்லி சொல்ல அவசர அவசரமாக பேச்சை முடிக்க..

 

அடுத்து பேசிய பிரதமர் மோடி, ”தொன்மையான மதுரை மாநகர தமிழ் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம் என தமிழில் உரையைத் தொடங்கினார். ``பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் சங்கத்தின் இருப்பிடமாக மதுரை இருந்து வருகிறது. மீனாட்சியம்மன் கோயில் அமைந்து தொன்மையான பாரம்பாரியத்தின் அடையாளமாக மதுரை விளங்குகிறது. மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என் அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன்.

 

modi

 

சற்று முன்புதான் நான் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்விக்கான முக்கிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினேன். இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். ஏழைகளுக்கு எளிய மருத்துவ வசதிகள் கிடைக்க மத்திய அரசின் தொலைநோக்கு பார்வைகளாகவே இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். மேலும் இதனால் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தூய்மை இந்தியா திட்டம் மக்களின் மிகப்பெரும் திட்டமாக விளங்குகிறது. இந்தியா முழுவதும் 9 கோடி கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கரை வருடங்களில் 35 ஆயிரம் கி.மீ தொலைவு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை உள்பட 10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன. டி-18 விரைவு ரயில் திட்டம் தமிழகத்தில்தான் முதல் முறையாக இயக்கபடுகிறது.

 

 

மத்திய அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சம உரிமை கொடுக்கத்தான் இந்த  10 % இடஒதுக்கீடு வழங்கியது. இதனால் எஸ்சி, எஸ்.டி மக்களுக்குப் பாதிப்பு இருக்காது. சில சுயநல சக்திகள்  இதை தமிழகத்தில் தவறாகப் பரப்பிவருகின்றனர். எதிர்மறை அர்சியலை இயங்கிருக்கும் இயக்கங்களும், கட்சிகளும் முன்னெடுக்கின்றன. எனவே இளைஞர்களே நீங்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

 

modi

 

தேவேந்திர குல வேளாளர் மக்களின் கோரிக்க கட்டாயம் பரிசீலனை செய்யபடும். என்று பேசிய மோடி தமிழகத்தின் அதுவும் மதுரையில் எதிர்கட்சிகளின் கடுமையான  கருப்பு கொடி எதிர்புகளுக்கு மத்தியில் கட்டாயம் அரசியல் பேசுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கபட்ட நேரத்தில், எந்தவித அரசியலும் பேசாதது பாஜக தொண்டர்கள் மத்தியில்  பெரும் சோர்வை ஏற்படுத்தியது. அங்கு கூட்டத்திற்கு வந்த தொண்டர் ஸ்ரீராம் நம்மிடம் சார் மிகுந்த எதிர்பார்ப்பில்தான் வந்தோம். அதிமுக தலைவரும் முதல்வரும் வருகிறார்கள் ஏதோ கூட்டணி அறிவிப்பு வந்தாலும் வரும் என்று எதிர்பார்தோம் எங்கள் கொடியோடு அதிமுக கொடிகளை கூட கட்ட மறுத்துவிட்டனர், இலை கட்சியினர் அவ்வளவாக நெருக்கமாக இல்லை இரு கட்சியினரும் இதில் எங்கள் கட்சி தலைவி தமிழிசையோ பத்து தொகுதியை வரிசையாக வாசிக்கிறார். என்னமோ கூட்டனி ஏற்பட்டு விட்டது போல.. மோடி மட்டுமல்ல நாங்களே மூடு அவுட்டாகத்தான் இருக்கிறோம் என்பதற்கு உதாரணமா ”அரசு நிகழ்ச்சியில் தொடக்கமாக பாடபடும் தமிழ்தாய் வாழ்த்தும் பாடபடவில்லை முடிவாக இசைக்கபடும் தேசிய கீதமும் ஒலிக்கவில்லை” இதிலிருந்தே தெரியவில்லையா மோடி மூடு அவுட் என்று  இவர் சொன்னதும் சரியாக தான் இருந்தது..

 

 

 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் மருந்துக்குக்கூட அதிமுக கொடியை எந்த இடத்திலும் பறக்கவில்லை, எப்போதும் முதல்வர் வரும் போது கூட்டம் கூட்டமாக வரும் அதிமுக தொண்டர்கள் ஒருவரையும் தேடினாலும் எங்கும் காணதது கொஞ்சம் எட்டியே நிற்கிறதோ அதிமுக என்றே எண்ண தோன்றுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்