Skip to main content

பாஜக அலுவலக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Enforcement Directorate raids BJP office manager's house

 

இன்று தமிழகத்தில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சாவூரிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

அண்மையில் தமிழகத்தில் சென்னை உட்பட புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 34 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. தொழிலதிபர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களின் இடங்களில் பரபரப்பாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 12.83 கோடி ரூபாய் வங்கியில் உள்ள பணம் முடக்கப்பட்டது. கணக்கில் வராத ரூபாய் 2.33 கோடி ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

முன்னர் நடந்த இந்த சோதனை மணல் குவாரி அதிபர்களை குறிவைத்து  நடத்தப்பட்டது. இன்று நடந்துவரும் சோதனையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை விசாரணையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஜோதிமணி என்ற ஊழியர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

‘சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்’ - தெற்கு ரயில்வே

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Chennai suburban trains operating as usual Southern Railway

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அதே சமயம் மிக்ஜாம் புயலால் ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி சென்னை புறநகர் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நாளை (07.12.2023) முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் உரிய அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையேயான புறநகர் ரயில்கள் சேவை நாளை முதல் வழக்கம்போல் இயங்கும். மேலும் திருவொற்றியூர் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டிக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை என சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்; 3வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Trapped workers; Rescue operation continues for 3rd day

 

சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் கட்டுமான பணிக்காக 56 அடி பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பள்ளத்தில் அங்கு பணியாற்றி வந்த 4 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து இந்த விபத்தில் சிக்கிய 4 தொழிலாளர்களில் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் பள்ளத்தில் சிக்கியுள்ள இருவரையும் மீட்கும் பணி 3 நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

இதற்கிடையே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், பள்ளத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்