Skip to main content

மகளை காதலிப்பதாக கூறி தாய்க்கு வலைவிரித்த ஆவின் ஊழியர்; இளைஞர் உயிரிழப்பு வழக்கில் திருப்பம்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 A's employee who set a trap for the mother by claiming to love her daughter; Turn in the  case

 

திருவாரூர் மாவட்டம் சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலைக்கான காரணம் குறித்த பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் சேந்தன்குடி பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி ராகுல் (29). இவர் திருவாரூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் மாங்குடியில் இருந்து ஆந்தகுடி செல்லும் சாலை பகுதியில் ராகுல் சடலமாக கிடந்தார். அவர் பைக் விபத்தில் உயிரிழந்திருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவருடைய தலையில் பலத்த வெட்டு காயம் இருந்ததால், அது விபத்தல்ல, திட்டமிட்ட படுகொலை என போலீசார்  சந்தேகமடைந்தனர்.

 

தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் நாகை மாவட்டம் ஆந்தகுடி பகுதியைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி ராகுல் சென்று சென்று வந்தது தெரியவந்தது. மாணவியின் வீட்டிற்கு சென்று நடத்தப்பட்ட விசாரணையில் ராகுல், மருத்துவ மாணவியை காதலித்து வந்ததாக ஊரில் அனைவரும் தெரிவித்தனர். ஆனால் ராகுலோ மாணவியின் தாய் கவிதாவை ரகசியமாக காதலித்து வந்தது தெரிய வந்தது. இருவரும் அடிக்கடி ஆந்தகுடி வீட்டில் சந்தித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர்.

 

 A's employee who set a trap for the mother by claiming to love her daughter; Turn in the  case

 

இந்நிலையில் அதே மருத்துவ மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நந்து என்கிற உறவுக்கார இளைஞர் கவிதா - ராகுல் இடையே ஏற்பட்ட முறையற்ற தொடர்பால் ஆத்திரம் அடைந்துள்ளார். உறவுக்காரர் என்பதால் கவிதாவின் வீட்டிற்கு சென்ற நந்து, 'ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்' என கேட்டுள்ளார். அதற்கு, தான் ராகுலை விலக நினைத்தாலும் அவர் மறுக்கிறார் என கவிதா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தா, ராகுலின் வீடு தேடி சென்று இந்த முறையற்ற தொடர்பை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இந்த தகவல் தெரிந்து ராகுலின் வீட்டில் உள்ளவர்களும் அவரை கண்டித்துள்ளனர்.

 

இந்நிலையில் சம்பவத்தன்று சொல்பேச்சு கேட்காதவராக ராகுல் கவிதாவையும் அவரது மகளையும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் வீட்டில் இருவரையும் விட்டுவிட்டு திரும்பியுள்ளார். அப்பொழுது கவிதா கொடுத்த தகவலின் பேரில் ராகுலை பின் தொடர்ந்து வந்த நந்தா மற்றும் அவரது நண்பர்கள் ராகுலை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த திட்டமிட்ட கொலையை மறைத்து ராகுலுக்கு சாலை விபத்து ஏற்பட்டதாக அவருடைய வீட்டிற்கு கவிதா  தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொலையில் ஈடுபட்ட நந்து, அதற்கு உறுதுணையாக இருந்த கவிதா மற்றும் முருகேஷ், நிர்மல், மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.