electrician misbehaved with a schoolgirl who was waiting for the bus

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது பள்ளி மாணவி. இவர், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாலை பள்ளி படிப்பை முடித்துவிட்டு பேருந்துக்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது, ஈரோடு மாவட்டம் பெரியார் நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் 35 வயதான சஞ்சய் என்பவர், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பள்ளி மாணவியை வெகு நேரம் நோட்டமிட்டுள்ளார்.

பின்னர், மாணவி தனிமையில் நின்று கொண்டிருந்ததை அறிந்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதைச் சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சியில் சஞ்சய்யிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், விடாமல் மாணவியை சஞ்சய் தனது இருசக்கர வண்டியில் மோதுவதுபோல துரத்தியுள்ளார். நல்வாய்ப்பாக அங்கிருந்து தப்பிய மாணவி, சொந்த ஊருக்கு சென்று தனக்கு நடந்த அத்துமீறல் குறித்து தாயிடம் தெரிவித்து அழுது இருக்கிறார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான மகளிர் போலீசார், ,மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சஞ்சய்-யை தேடி வந்தனர். ஆனால், அதற்குள் போலீசார் தேடுவதை அறிந்த சஞ்சய் தலைமறைவாகி விட்டார். இருப்பினும், விடாமல் துரத்திய விஜயா தலைமையிலான மகளிர் போலீசார், ஈரோட்டில் பதுங்கிருந்த சஞ்சய்-யை பிடித்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

Advertisment

இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மாணவிக்கு நடந்த பாலியல் அத்துமீறல் வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவத்தன்று குண்டடம் பகுதியில், நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சஞ்சய் தனது மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் வந்திருக்கிறார். அப்போது, 16 வயது மாணவி தனிமையில் பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்ததைப் பார்த்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சஞ்சய் போலீசாரிடம் விசாரணையில் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சஞ்சய் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். பின்னர், திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே 16 வயது மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஈரோட்டைச் சேர்ந்த எலக்ட்ரீசியன், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.