Skip to main content

தேர்தல் முடிவுகள்; முன்னிலை நிலவரம்!

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Election Judgment; election result update

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 8.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 252 தொகுதிகள் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 160 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகத்தில் தென் சென்னையில் திமுக தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்து வருகிறார். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகித்து வருகிறார். வயநாட்டில் ராகுல் காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.  வாரணாசி தொகுதியில் மோடி முன்னிலையில் உள்ளார். காந்திநகர் தொகுதியில் அமித்ஷா முன்னிலை வகித்து வருகிறார். நெல்லையில் அம்பை பகுதி வாக்குப்பதிவு இயந்திர அறையின் சாவி தொலைந்தால் முகவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் பாதுகாப்புடன் பூட்டு உடைக்கப்பட்டு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்