Skip to main content

இவ்வளவுபேர் வாக்களிக்கவில்லையா? - தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

Election Commission Information!

 

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கும் நிலையில், மே 2 அன்று எத்தனை மையங்களில் வாக்கு எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

மொத்தமாக 72 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில், 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை, 4.57 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்கு சதவீதம் 72.78 என அறிவிக்கப்பட்டிருத்த நிலையில், அதில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
The High Court ordered the Election Commission to take action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டிற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. அற்ப காரணங்களுக்காக திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தலைப்பில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை உயர்வு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக சார்பில் சில விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. எனவே அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாட்களில் பரீசிலித்து அனுமதி தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

The High Court ordered the Election Commission to take action

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்யநாராயனா அமர்வில் இன்று (15.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிடுகையில், “தேர்தல் விளம்பரஙகள் தொடர்பாக விதிமுறைகள் வகுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இது குறித்து வரும் 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

தேர்தல் தேதியில் மாற்றம்; வேட்பாளர் உயிரிழப்பால் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Change in Election Date due to candidate's incident happened in madhya pradesh

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தலின் போது நடைபெற இருந்தது. அந்த தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில், பிடல் தொகுதி வேட்பாளராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அசோக் பலவி வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

Change in Election Date due to candidate's incident happened in madhya pradesh

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி நேற்று முன் தினம் (09-04-24) மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிரிழந்துவிட்டார். இதனால், ஏப்ரல் 26ஆம் தேதி அன்று பிடல் தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, ‘தேர்தலின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளர் உயிரிழக்கும் வகையில், அந்தத் தொகுதிக்கு வேறு புதிய வேட்பாளரை அக்கட்சி அறிவிக்க அவகாசம் கொடுக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 52ன்படி சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படும். அந்த வகையில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலவி கடந்த 9ஆம் தேதி உயிரிழந்த நிலையில், பிடல் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், இந்தத் தொகுதிக்கான வாக்கு பதிவானது, மூன்றாம் கட்ட தேர்தலின் போது மே 7ஆம் தேதி நடைபெறும்’ என்று அறிவித்துள்ளது.