Skip to main content

முட்டை விலை வரலாறு காணாத உயர்வு!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

eggs price namakkal district

 

 

நாமக்கல்லில் வரலாறு காணாத அளவாக ஒரு முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த 2017- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முட்டை கொள்முதல் விலை ரூபாய் 5.16 ஆக இருந்ததே அதிகபட்ச விலையாகும். முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் வெளி மாநிலங்களில் தேவை அதிகரிப்பால் முட்டை விலை புரட்டாசி மாதத்தில் அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களில் முட்டை விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிலிண்டர் விலை உயர்வு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Increase in cylinder price

வர்த்தக சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து மொத்தமாக ரூபாய் 1960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் சிலிண்டரின் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபடும். காரணம் தேர்தல் நேரங்களில் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதால் குறைப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதிக்கு அரசியல் கட்சிகள் காத்திருக்கும் சூழலில் சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை 23 ரூபாய் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.