கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,

Advertisment

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. முழுமையாக மழைப்பொழிவு இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.அதனை சரி செய்ய அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் நிலவும்குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆலோசனை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

edppadi palanaisamy press meet

காவிரி மேலாண்மை ஆணைய அறிவுறுத்தலின் படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடும் என நம்புகிறேன். மும்மொழிக் கொள்கையை நான் ஆதரிப்பதாக பத்திரிக்கைகள் பேசுகின்றன. நான் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கவில்லை. பிற மாநிலங்களில் உள்ள தமிழர்களின் கோரிக்கையை ஏற்று தான் டுவிட்டரில் பதிவு செய்திருந்தேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு விழாவிற்காகடெல்லி சென்றிருந்த போது அங்கு வாழும் தமிழர்கள் சார்பாக அங்குவந்ததமிழ் பத்திரிகையாளர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ்வழியில்படிக்க விரும்புகின்றார்கள் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

Advertisment

அவர்களின் கோரிக்கை ஆதரவு தெரிவிக்கும் வகையில் தான் அப்படி ஒரு டுவிட்டைநான் பதிவிட்டு இருந்தேன். ஆனால் அது சர்ச்சையை கிளப்பியதால்நீக்கிவிட்டேன். தமிழ்பிற மாநிலத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று தான் டுவிட்டரில்பதிவிட்டேன்.ஆனால் அதை மும்மொழிக் கொள்கையைதான் ஆதரிப்பதாக அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல்களை பரப்புகின்றனர்.தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையில் தான் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனக் கூறினார்.