Skip to main content

கமலுக்கு என்ன தெரியும் அரசியலில்?-எடப்பாடி பழனிச்சாமி கேள்வி 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

 

EPS

 

உள்ளாட்சி தேர்தலுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் நடத்துவதற்கென தன்னாட்சி பெற்ற அமைப்பு, அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்கள் தேர்தலை நடத்துவார்கள். கால அவகாசம் குறைவு என்பதால் முன்னதாகவே விருப்பமனு வாங்குகிறோம். அமமுகவில் இருந்து பலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம்கூட எடப்பாடி, சேலம் சட்டமன்ற தொகுதியில் அமமுகவில் இருந்து விலகி நிறைய பேர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள்.


அமமுக இன்னும் அரசியல் கட்சியாகவே பதிவுசெய்யப்படவில்லை. அப்படியிருப்பிக்க அதில் உள்ளவர்கள் பல கட்சிக்கு போக தூதுவிட்டு வருவதாக கேள்விப்பட்டேன்.

ரஜினி வெற்றிடம் வெற்றிடம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். கமல் பெரிய தவைவர் தானே ஏன் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடவில்லை. வயது முதிர்ந்துவிட்டது. வயது 65, 66 ஆகிவிட்டது. திரைப்படத்திலே தகுந்த வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் கட்சி ஆரம்பிக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் யாரும் கட்சி ஆரம்பிக்கலாம் தவறில்லை. ஆனால் மற்றவர்களை குறை சொல்லி பேசுவதுதான் தவறாக இருக்கிறது. இத்தனை காலமாக எங்கே போனார்கள். நாங்கள் எடுத்தவுடன் அரசியலுக்கு வரவில்லை. கிட்டத்தட்ட 45 ஆண்டு காலம் கட்சி பணியில், களப்பணியில், பல மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு  சிறை சென்று மக்கள் ஆதரவை பெற்று இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறோம். ஆனால் ரஜினி, கமல் ஆகியோர் மக்களுக்கு என்ன  பணி செய்தார்கள்.

திரைப்படத்தில் நடித்தார்கள் வருமானத்தை ஈட்டிக்கொண்டார்கள். இன்றுவரை படத்தில் நடித்துக்கொண்டும், வருமானம் ஈட்டிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். ஆனால் இருவரும் மக்களிடம் ஏதோ செல்வாக்கு இருப்பதை போன்று காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை விட பெரிய நடிகர் சிவாஜி கணேசனுக்கே தேர்தலில் என்ன நிலை ஏற்பட்டது என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். அவர்களைவிட இவர்கள் பெரிய நடிகர்கள் அல்ல. எம்ஜிஆருக்கு அடுத்தகட்டத்தில் இருந்த நடிகர் சிவாஜி கட்சி தொடங்கி அவருக்கு ஏற்பட்ட நிலைதான் இவர்களுக்கு ஏற்படும்.

கமல்ஹாசன் ஒரு முன்னேற்பாடை செய்துகொண்டார். அவர் கட்சி தொண்டர்கள் மட்டும் அவரது படத்தை பார்த்தால் போதும் என நினைத்துவிட்டர். எனவேதான் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். கமலுக்கு என்ன தெரியும் அரசியலில். எத்தனை ஊராட்சி மன்றம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அந்த பகுதி மக்கள் யார் என என்ன அடிப்படை தெரியும். அடிப்படையே தெரியாமல் தலைவர் மாதிரி தன்னை உருவாக்கி கொண்டார்கள்.

திரைப்படத்தில் நடித்தார்கள் பணம் ஈட்டினார்கள் அதைவைத்து அரசியலில் பிரவேசம் செய்கிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பித்தால் பார்க்கலாம் யூகத்தில் எதுவும் சொல்ல இயலாது என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.