Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி: ஆட்சியர் உத்தரவால் குடும்ப பாரம் சுமந்த மாணவிக்கு உதவி செய்ய களமிறங்கிய அதிகாரிகள்!!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

Echo of Nakkeeran news ... The officers who set out to help the student who was carrying the burden of the family by the order of the Collector

 

“கதவு வச்ச வீடும், டிகிரி படிக்க உதவியும் கிடைத்தால் போதும் அண்ணா.. மனநலம் பாதிச்ச அம்மாவை காப்பாத்திடுவேன் -பள்ளி வயதில் பாரம் சுமக்கும் சிறுமி!!" என்ற தலைப்பில் செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை நக்கீரன் இணையத்தில் சிறப்பு செய்தியும், வீடியோவும் பதவிட்டிருந்தோம்.

இந்தச் செய்தியில் சிறுமி சத்தியா மற்றும் அவருக்கு உதவிகள் செய்து வரும் 'மக்கள்பாதை' ஒருங்கிணைப்பாளர்கள் மொபைல் எண்ணும் இணைத்திருந்தோம். செய்தி வெளியான சற்று நேரத்தில் தொடங்கி, அவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களின் ஏராளமான அழைப்புகள் வந்து திணறடித்துவிட்டது.

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் சிறுமி சத்தியாவின் நிலை குறித்து சொன்னதோடு அரசு உதவிகள் கிடைக்க ஆவண செய்யவும் கேட்டிருந்தோம். நிச்சயமாக உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்த ஆட்சியர், உடனடியாகச் சிறுமிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு வீடு கிடைக்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.

 

Echo of Nakkeeran news ... The officers who set out to help the student who was carrying the burden of the family by the order of the Collector


ஆட்சியரின் உத்தரவுப்படி இன்று செப்டம்பர் 4 ஆம் தேதி காலை வருவாய்த் துறை அதிகாரிகள் பெருங்களூர் ஊராட்சியில் உள்ள போராம் கிராமத்திற்குச் சென்று சிறுமி சத்தியா மற்றும் மனநலம் பாதித்த அவரது தாயார் வசிக்கும் மண் குடிசைப் பகுதியை ஆய்வு செய்தனர். ஆய்வில், அது மேய்ச்சல் நிலம் எனத் தெரியவந்தது. அதனால், அந்த இடத்தில் வீட்டுமனைப் பட்டா கொடுக்க முடியாது. எனவே, மாற்று இடத்தில் மனை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அரசு வீடு வழங்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டது.

மேலும் நக்கீரன் இணைய செய்தியைப் பார்த்து சிறுமி படித்த பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் வந்து மாணவிக்கு ஆறுதல் சொன்னதுடன் சிறு உதவிகளும் செய்தனர். திருச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நவீன கழிவறை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. இந்த நிகழ்வுகள் நடக்கும் போது 'மக்கள் பாதை' அமைப்பினர் சத்தியாவிற்கு துணையாக இருந்தனர். 

மாவட்ட  ஆட்சியர் உறுதி அளித்தது போலவே, அனைத்து அரசு உதவிகளும் கிடைத்து வருவதைப் பார்த்து சிறுமி சத்தியா மற்றும் 'மக்கள் பாதை' அமைப்பினர் ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் மற்றும் உதவிகள் செய்ய முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி கூறியுள்ளனர். நக்கீரன் சார்பிலும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்வோம்.

 

Ad

 


திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமைகளில் வீட்டுமனைப் பட்டா சிறுமி சத்தியாவிற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு பலரது உதவிகளும் வீடு கட்டும் பணிகளும் தொடங்கலாம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.