Skip to main content

நாமக்கல்லில் நில அதிர்வா? அதிகாரிகள் ஆய்வு

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

 Earthquake in Namakkal? Officers review

 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று பல பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

இன்று மதியம் ஒரு மணி அளவில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்,  மோகனூர். ப.வேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சில நொடிகள் மட்டுமே கேட்கப்பட்ட இந்த சத்தத்தால் வீடுகளில் லேசான அதிர்வு ஏற்பட்டது. பறவைகளும் கூட்டம் கூட்டமாகப் பறந்து சென்றது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த அதிர்வு குறித்து அதிகாரிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடந்த 2020 ஆம் ஆண்டும் இதே போல் சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டது. அதுவும் பகல் வேளையில் ஏற்பட்டது. சூப்பர்சோனிக் விமானங்கள் இயக்கப்படும் போது வெளியாகும் காற்றின் சத்தம் தான் இந்த ஒலிக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டாலும், தொடர்ந்து இந்த அதிர்வு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு; மத்திய குழு சென்னை வருகை 

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
'Miqjam' storm damage; Central Committee visit Chennai

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதே சமயம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மிக்ஜாம் புயம் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழு நாளை (11.12.2023) சென்னை வர உள்ளது. இந்த குழுவின் ஆய்வுக்கு பின்னர் தேவைப்படும் நிவாரணத்தை மத்திய மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். இந்த குழு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு நடத்த உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Mikjam storm damage; Personal inspection by Chief Minister M.K.Stal

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் எனப் பலரும் உடன் இருந்தனர். அதேபோன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார்.