முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று (05/12/2021) சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்தும், மலர்த்தூவியும் மரியாதைச் செலுத்தினர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். மேலும், அ.ம.மு.க.வின் கட்சி நிர்வாகிகள் பலரும் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினர். அதேபோல், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் மரியாதைச் செலுத்தினார்.

Advertisment

இதனிடையே, ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதைச் செலுத்த வந்த அ.தி.மு.க., அ.ம.மு.க. தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.