Skip to main content

ரூ.5 கோடி லஞ்சம்; டிஎஸ்பி சஸ்பெண்ட்!

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

 DSP kabilan suspended for demanding rs 5 crore bribe

 

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் ரூ.1 லட்சத்திற்கு, ரூ.15 ஆயிரம் அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் பேரிடம் ரூ. 6 ஆயிரம் கோடி வரை மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. சில தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் முக்கியப் புள்ளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி கபிலன் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகார், உயர் அதிகாரிகளுக்கு சென்றதையடுத்து, டிஎஸ்பி கபிலனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதோடு அவரிடம் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக ஐ.எஃப்.எஸ் நிறுவனம் சார்பில் ஹரி என்பவரிடம் இருந்து ரூ. 30 லட்சம் வாங்கியுள்ளதாக டி.எஸ்.பி. கபிலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.  இந்த நிலையில் டிஎஸ்பி கபிலனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் வழக்கு தொடர்பாக கபிலன் யாரிடம் எல்லாம் விசாரித்தாரோ, அவர்களிடம் மீண்டும் விசாரிக்கவும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளதாக  தமிழக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.

Next Story

"ஊருக்குள் வரக் கூடாது அங்கேயே நில்லுங்கள்” - அமைச்சருக்கு எதிர்ப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kanikapuram area People  struggle against Minister Durai Murugan

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராமாபுரம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் சாலையை வழிமறித்து ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

அப்போது ஒரே சமூகத்தினர் உள்ள ஊரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு சாலையில் மரக்கட்டைகளும்,  இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஊருக்குள் நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து நுழைய முயற்சித்த கட்சியினரை ஊருக்குள் வராதே, என்ன செய்தார் எம்.பி. 5 ஆண்டுகளில் சாலை கூட சரியாக போடவில்லை. எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை என எதிர்ப்பை தெரிவித்து ஊருக்குள் வர விடாமல் தடுத்தனர்.  இதனால் அங்கு வாக்குவாதம் ஆகி பரபரப்பாகியது மேலும் அத்துமீறி நுழைந்தால் வாகனத்தின் மீது மது பாட்டிலும், கற்களையும் வீசி கண்ணாடியை உடைப்போம். அசிங்கப்படாமல் போய்விடுங்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்காமல் வந்த வழியே திரும்பிச் சென்றனர். தனது சமூகத்தைச் சேர்ந்த நபர்களிடம் வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் துரைமுருகனை அதே சமூகத்தினர் விரட்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.