Skip to main content

மாணவர்களை படி படி என்று விரட்டாதீர்கள்: சார்-ஆட்சியர் கே.எம்.சரயு பேச்சு

Published on 15/03/2018 | Edited on 15/03/2018
Collector 1


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குளிர்சாதன வகுப்பறை திறப்பு விழா மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை அ.கிறிஸ்டி வரவேற்றுப் பேசினார்.. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னழகு, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சீனி.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளிர்சாதன வகுப்பறையை திறந்து வைத்து சார் ஆட்சியர் கே.எம்.சரயு பேசியதாவது:

இந்த பள்ளி மாணவர்கள் என்னை சீருடையில் வரிசையாக நின்று வரவேற்கும் போது இது அரசுப் பள்ளி தானா என ஆச்சர்யப்பட்டேன்.. இந்த பள்ளியில் குளிர்சாதன வகுப்பறை, நூலகம், புரஜெக்டர் ஆகியவற்றோடு இருப்பது அவ்வளவு நன்றாக உள்ளது. என்னால் நம்ப முடியவில்லை ஒரு தொடக்கப் பள்ளியில் இவ்வளவு வசதிகள் இருப்பதை பார்த்து.. மேல் நிலைப்பள்ளிகளில் நிறைய பேர் நன்கொடை வழங்குவார்கள்.. ஆனால் ஒரு தொடக்கப் பள்ளியில் இவ்வளவு என்றால் பெரிய விஷயம் தானே. முன்பெல்லாம் தனியார் பள்ளி விழாக்களுக்கு செல்வேன். இப்பொழுது செல்வது கிடையாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதே எனது நோக்கம். தனியார் பள்ளி விழாக்களில் மாணவர்கள் நாம் பேசுவதை கூட கவனிக்காமல் நண்பர்களோடு பேசுவார்கள். ஆனால் இங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அவ்வளவு அமைதியாகவும் ஒழுக்கமாகவும் இருப்பதை பார்க்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது.

ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து நீங்கள் உங்களை நல்ல ஆசிரியராக மாற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அரசுப் பள்ளியை இப்படி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது. இதை விட இன்னும் உயர்ந்த நிலைக்கு இப்பள்ளியை கொண்டு செல்ல வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பாமல் அரசுப் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் எண்ணத்தை ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும். நானும் ஓர் அரசுப் பள்ளியில் தான் பயின்றேன். அப்பொழுது எல்லாம் பாட புத்தகங்கள் தான் இலவசமாக கொடுத்தார்கள். இன்று உள்ள வசதிகள் அப்பொழுது கிடையாது. இன்று உள்ள ஆசிரியர்கள் அரசு வழங்கும் வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். அரசு பள்ளியில் பயிலும் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும். நல்ல குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்படி நல்ல குழந்தைகளை அனுப்பும் போது நீங்கள் அனுப்பும் குழந்தைகள் இந்த உலகத்துக்கே நல்ல நபராக தேர்ந்தெடுத்து அனுப்பியவராக இருப்பார்கள்.
 

Collector 2


நானும் நிறைய அரசுப் பள்ளிகளுக்கு சென்று வந்துள்ளேன்.. அப்பொழுது ஆசிரியர்களின் குறைகளை கண்டு அறிவுரை கூறி தான் வந்துள்ளேன். பெற்றோர்களாகிய உங்களுக்கும் நிறைய பொறுப்பு உள்ளது. பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு மணி நேரமாவது குழந்தைகளிடம் பெற்றோர்கள் கலந்துரையாடுங்கள். ஆசிரியர் என்ன சொன்னாங்க, நண்பர்கள் என்ன செய்தார்கள் என கேளுங்கள்.. படி படி என்று சொல்லாதீங்க.. அவர்களிடம் பேசுங்கள் அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கும். அவர்கள் அதை அம்மாவிடம் அப்பாவிடம் கூறி தீர்வு காண நினைத்திருப்பார்கள்.. அவர்கள் உங்களை சார்ந்து இருப்பார்கள்.. எனவே குழந்தைகளிடம் நல்ல நண்பர்களாக பெற்றோர்கள் இருந்து பேசுங்கள். ஆசிரியர் சொல்வதை கேட்க சொல்லுங்கள், பெரியோர்கள் சொல்வதை கேட்க சொல்லுங்கள்.. நீங்களே ரோல் மாடல்களாக இருங்கள் கண்டிப்பாக நம் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வருவார்கள் என்றார்.

மேலும் அரசுப்பள்ளிக்கு குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி கொடுத்து இன்று திறப்பு விழாவிற்கு வருகை தந்துள்ள பெங்களூரைச் சேர்ந்த ஜஸ்டின் அலங்காரம் - ப்ரியா ஜஸ்டின் ஆகியோருக்கு ஊர் சார்பாகவும் பள்ளி சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தலைமை ஆசிரியர் கிறிஸ்டி கூறியதாவது: எங்களது பள்ளி மேலூரில் தனியார் பள்ளி வேன்கள் அதிகமாக வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்லும் நிலை இருந்தது. இந்நிலை மாற வேண்டும். நம்ம ஊர் பிள்ளைகள் நம் பள்ளியில் படிக்க வேண்டும் என முடிவு செய்து அனைத்து வசதிகளையும் பள்ளியில் ஏற்படுத்தினேன்.. மேலும் வெயில் காலம் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடையூறாக இருப்பதை அறிந்தேன்.. அந்நிலை மாறி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைய முகநூலில் உள்ள நண்பர்கள் மூலம் நன்கொடை பெற்று வகுப்பறையை குளிர்சாதன வகுப்பறையாக மாற்றியுள்ளேன். அரசு பள்ளி குறைவானது என்ற எண்ணத்தை மாற்றி அரசு பள்ளி தான் உயர்ந்தது என்ற எண்ணத்தை பெற்றோர்களிடம் ஏற்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதே தனது எண்ணம் என்றார்.

மேலும் குழந்தை நேய கற்றல் முறையில் தற்பொழுது 1 முதல் 3 வரை உள்ள வகுப்புகளுக்கு ஓர் குளிர்சாதன வகுப்பறையும், 4 முதல் 5 வரை உள்ள வகுப்புகளுக்கு ஓர் குளிர்சாதன வகுப்பறையாகவும் எம் பள்ளி மாற்றப்பட்டுள்ளது என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

Sanitation workers lay siege to Bhubaneswar sub Collector office

 

புவனகிரி பேரூராட்சியில் பணியாற்றும் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் 17 பேரை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கியதாகவும், இனிமேல் வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறியதால் அவர்கள் திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சதானந்தம் உள்ளிட்டவர்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனையறிந்த புவனகிரி வட்டாட்சியர் சிவகுமார், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர்களை அழைத்து, இது குறித்து விபரம் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். மேலும், தற்போது என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

Next Story

அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற குறை கேட்புக் கூட்டம்; விவசாயிகள் வெளிநடப்பு  

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

farmers meeting in virudhachalam sub collector office issue 

 

ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்வார்கள். கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகள் முன்வைக்கும் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அதிகாரிகள் பதில் கூறுவார்கள். மேலும் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் மாவட்ட தலைநகருக்கு வந்து செல்வதால் கால விரயமும் நேர விரயமும் பொருளாதார விரயமும் ஏற்படும். இவற்றைத் தவிர்க்கும் பொருட்டும் விவசாயிகள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்வு காண ஏதுவாகவும் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள் கிழமைகளில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இரண்டாவது திங்கள் கிழமை கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெறும் எனவும், மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமான விவசாயிகள் குறை கேட்புக் கூட்டமும் நடைபெறும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

 

அதையடுத்து மார்ச் மாதத்தின் முதல் திங்கள் கிழமையான கடந்த வார திங்கட்கிழமையன்று மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு அவரவர் பகுதி விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கி கூறினர். இந்நிலையில் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையான இன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் விருத்தாசலம், சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கோட்டாட்சியர் லூர்துசாமி தலைமையில் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொள்வதற்காக விவசாய சங்கப் பிரதிநிதிகள்,  விவசாயிகள், பொதுமக்கள் பலரும் வருகை தந்தனர். விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் சார்-ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலேயே இருக்கைகள் போடப்பட்டு அதில் விவசாயிகள் ஒரு பக்கமும் அதிகாரிகள் இன்னொரு பக்கமும் அமர வைக்கப்பட்டனர். விவசாயிகள் அதிகாரிகளை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாதபடி உட்புறமாக உட்கார்ந்து இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், " சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்லக்கூடிய வாசற்படியில்  அமர வைத்து எதற்காக கூட்டம் நடத்துகிறீர்கள்?" என அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், போதிய இட வசதி இல்லாமல்  விவசாயிகளை அவமதிக்கின்ற வகையில் செயல்படும் அதிகாரிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய படி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

farmers meeting in virudhachalam sub collector office issue 

பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகளைக் கூறுவதற்காகக் கூட்டத்திற்கு வந்தால், அவர்களை இழிவுபடுத்தும் விதமாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகத்தின் அராஜக போக்கை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். விவசாயிகள் திடீரென்று கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம் விவசாயிகளின் போராட்டத்திற்குப் பிறகு சார் ஆட்சியர் அலுவலக மாடியில் உள்ள கூட்ட அரங்கை சுத்தப்படுத்தி அங்கு சிறிது நேரத்திற்குப் பிறகு கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.