
சிவகாசி அருகே கிராமம் ஒன்றில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் சடலம் கிடந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் இருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவுகள் இருந்தது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிவகாசி அருகே புதுக்கோட்டை என்ற கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் சடலம் கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொட்டியில் இறந்த நாயின் சடலத்தைப் போட்டுச் சென்ற மர்ம நபர்கள் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.