Skip to main content

சாமி கும்பிடச் சென்ற பெண்ணை கடித்துக் குதறிய நாய்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! 

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
dog that bit the woman Sami went to worship

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த கல்பனா( 48). அவர் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அப்பொழுது கோயில் வளாகத்தில் படுத்திருந்த நாய் ஒன்று திடீரென கல்பனாவை ஓடிவந்து கடித்துள்ளது. இதில் அவர் அலறி  கூச்சலிட்டும் விடாமல் கை, கால் உள்ளிட்ட இடங்களில் நாய் கடித்துக் குதறியது. இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நாயை துரத்தி விட்டனர்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கல்பனாவை அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு கல்பனாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொண்டசமுத்திரம் ஊராட்சி பகுதியில் அதிக அளவிலான தெரு நாய்கள் சுற்றுவதாகவும் இதை கட்டுப்படுத்த ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதுமே தெருநாய்கள் பொதுமக்களை குறிப்பாக சிறார்களை பெண்களையும் கடித்து குதறுவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது அரசு இதில் கவனம் செலுத்தி நாய்களுக்கு தடுப்பூசியும் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தம்பியின் உடலை மீட்டுத் தாருங்கள்; ஆட்சியர் காலில் விழுந்து கதறிய அக்கா

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
sister asked collector to return body of her brother who passed away in Malaysia

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுன் தேவராஜ் (39). இவர் எலக்ட்ரீசியன் வேலை தேடி மலேசியா சென்ற நிலையில் அங்கு இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டுத்தரக்கோரி இன்று காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனு அளிக்க வந்த உயிரிழந்த அணு தேவராஜன் சகோதரி விக்டோரியா மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காலில் விழுந்து கதறி விழுந்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

“எப்படியாவது எனது தம்பியின் உடலை மீட்டுத் தாருங்கள்..” எனக் கோரிக்கை வைத்து மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் அவரை மருத்துவர்கள் பரிசோதித்துப் பிறகு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சையாக அழைத்துச் சென்றனர். இங்கிருந்து தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பதிலளித்துள்ளார்.

Next Story

நீர் நிலைகளில் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு; பொதுமக்கள் வேதனை 

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Damage to ground water table due to dumping of garbage in water bodies

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது மண்டலம் 15 வார்டு பகுதிகளில் உள்ள குப்பைகளைச் சேகரித்து அரசு முறையான இடம் தேர்வு செய்து அதற்கான இடத்தில் குப்பை கழிவுகளை கொட்டாமல் அதற்கான இடமும் தேர்வு செய்யாமல் காட்பாடி தாராப்படுவேடு ஏரியில் எடுத்துச் சென்று கொட்டி மலைபோல் குவித்து தீட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் ஏரியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு ஏரியின் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகைமண்டலமாக காட்சியளிப்பதால் துர்நாற்றம் வீசுகின்றது.

இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாநகராட்சி கழிவுகளை கொட்டுவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்து அதற்கான இடத்தில் குப்பைகளை கொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் என அப்பகுதியில் பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.