Skip to main content

பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் ஏலத்திற்கு வருகிறதா? கவிதாலயா விளக்கம்!

Published on 13/02/2018 | Edited on 20/02/2019

 

வங்கியில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாததால் இயக்குனர் பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை ஏலத்தில் விற்க வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 

இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்டவர் பாலச்சந்தர். தாதா சாகோப் பால்கே விருது பெற்ற இவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்வதவர். தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் பாலச்சந்தர், கடந்த 2014ஆம் ஆண்டு உயிர்நீத்தார்.

 

அதையடுத்து, அவரது தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா செயலற்றுக் கிடந்தது. இந்நிலையில், இயக்குனர் பாலச்சந்தர் யூ.சி.ஓ. வங்கியில் வாங்கியிருந்த ரூ.1.36 கோடியைத் திரும்பச் செலுத்தாததால், மயிலாப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தை ஏலத்தில் விற்க சம்மந்தப்பட்ட வங்கி முடிவு செய்துள்ளது. இந்த வீட்டின் ஒரு பகுதி பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி பெயரிலும், மற்றொரு பகுதி அவரது மனைவி ராஜம் பாலச்சந்தர் பெயரிலும் உள்ளன.

 

Balaa

 

இந்நிலையில், இந்தத் தகவல் குறித்து பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் டிவி, தொடர் நிகழ்ச்சிகளின் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் 2010 ஆம் ஆண்டு குடும்ப உறுப்பினர்களின் வேறு சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் வாங்கியது. 2015ஆம் ஆண்டில் திரைப்பட மற்றும் டிவி தொடர்களை நிறுத்திவிட்டு, டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்ள முடிவுசெய்தது. முதலும், வட்டியுமாக சேர்த்து கணிசமான தொகையை செலுத்திவிட்டது. மீதமுள்ள கடன் தொகையைத் திரும்பச் செலுத்த வங்கியுடன் one time settlement பேச்சுவார்த்தையை சட்டரீதியாக நடத்திவருகிறது. இந்நிலையில், வங்கி செய்தியின் அடிப்படையில் ஊடகங்களின் செய்தி உண்மைக்குப் புறம்பானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

படப்பிடிப்பிற்காகக் கட்டப்பட்ட வீடு - ஏழைக்குப் பரிசாகக் கொடுத்த படக்குழு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Makers Of Malayalam Film Anbodu Kanmani Gift House to family Built For Filming

மலையாளத்தில் அன்போடு கண்மணி என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. லிஜு தாமஸ் இயக்கியுள்ள இப்படத்தை விபின் பவித்ரன் தயாரித்துள்ளார். இதில் அர்ஜுன் அசோகன், அனகா நாராயணன், ஜானி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்க சாமுவல் ஏபி இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள தலக்சேரி பகுதியில் நடந்தது. அங்கு ஒரு ஏழ்மையான வீட்டில், அந்த குடும்பத்தினரின் அனுமதியோடு படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பின்னர் கதைக்காக அந்த இடத்தில் ஒரு புது வீட்டையே கட்டியுள்ளனர். பின்பு அதில் படமெடுத்து, மொத்த படப்பிடிப்பும் முடிந்த பின்னர் அந்த புது வீட்டை அந்த ஏழ்மையான குடும்பத்தினருக்கே பரிசாக வழங்கியுள்ளனர். அவர்களின் நிலைமை கருதி வீட்டை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  

புது வீட்டின் சாவியை நடிகரும் முன்னாள் பாஜக எம்.பியுமான சுரேஷ் கோபி, அந்த குடும்பத்தாரிடம் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் படக்குழுவினருக்கு பாராட்டும் குவிந்து வருகின்றது.