Skip to main content

'ஜாமீன் வேணுமா...? பள்ளிக்கு கழிவறை கட்ட நிதி தாங்க...?'- ஐகோர்ட் அதிரடி!

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

highcourt

 

பள்ளி, கல்லூரி மாணவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் புகையிலை, போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கல்வி நிலையங்களுக்கு அருகிலேயே விற்பது தவறு என அரசால் எச்சரிக்கப்படும்பொழுதும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதன் மீதான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி வளாகத்திற்கு அருகே போதைப்பொருள் விற்றவர்களுக்கு ஜாமீன் வேண்டுமென்றால் அரசுப் பள்ளிகளுக்குக் கழிவறை கட்ட நிதி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை உயர்நீதிமன்ற கிளை கொடுத்துள்ளது.

 

பள்ளி வளாகத்திற்கு அருகே போதைப்பொருட்களை விற்பனை செய்த வழக்கில் தென்காசியைச் சேர்ந்த மகேஸ்வரி, தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், மதுரை மேலூரைச் சேர்ந்த முரளி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் மூவரும் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தென்காசியைச் சேர்ந்த மகேஸ்வரி அவரது கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குக் கழிவறை கட்ட 1.50 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும், மதுரை மேலூரைச் சேர்ந்த முரளி ஒத்தக்கடை பெண்கள் பள்ளிக்கு 25,000 ரூபாய் மதிப்பில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் வழங்க வேண்டும், அந்தோணி தூத்துக்குடி அரசு மகளிர் பள்ளிக்குக் கழிவறை கட்ட  50 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என நிபந்தனை விதித்த நீதிமன்றம், நிபந்தனையை ஏற்றால் ஜாமீன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.