Skip to main content

திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு டி.என்.டி சமூகமக்களின் போராட்டம்!

Published on 01/01/2021 | Edited on 01/01/2021

 

DNT community Struggle in front of Trichy District Collector's Office!

 

சுதந்திரப் போராட்டத்தில், பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து 'வளரி', 'வேல்', 'ஈட்டி' போன்ற ஆயுதங்களால் போராடிய மக்கள், சீர்மரபினர் பழங்குடியினர் (டி.என்.டி) என்றழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள 68 சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள், மொத்தம் 2 கோடி மக்கள் உள்ளனர். 

 

வெள்ளையனை எதிர்த்ததற்காகப் பல ஆயிரக்கணக்கான டி.என்.டி. மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று கடலிலே கொட்டினார்கள் வெள்ளையர்கள். அவர்கள் காலத்தில் 'கண்காணிக்கப்பட வேண்டிய பழங்குடியினர்' (என்.டி.) எனவும் சுதந்திரத்திற்குப் பிறகு 'சீர்மரபினர் பழங்குடியினர்' (டி.என்.டி.) என்றும் அறிவித்து, அந்த மக்களுக்கு அனைத்து வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் மேலும் பல துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 

 

1979-ல் எம்.ஜி.ஆரால் சீர்மரபினர் பழங்குடியினர் (டி.என்.டி.) என்பதை, சீர்மரபினர் சமூகம் (டி.என்.சி.) என மாற்றி சலுகைகள் குறைக்கப்பட்டது. அதன்பின் பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு 2019-ல், மீண்டும் சீர்மரபினர் பழங்குடியினர் (டி.என்.டி) என மாற்றப்பட்டது. அப்பொழுது மத்திய அரசின் சலுகைகளைப் பெற மட்டுமே டி.என்.டி. செல்லும் என்றும் மாநில அரசில் டி.என்.சி.யே தொடரும் எனவும் அரசு குறிப்பிட்டிருந்தது.

 

DNT community Struggle in front of Trichy District Collector's Office!

 

இதனால், ஒரே சான்றிதழ் டி.என்.டி. என வழங்க வேண்டும். கணக்கெடுப்பு நடத்தக்கூறி மத்திய அரசு வழங்கிய நிதியைக் கொண்டு டி.என்.டி. மக்களைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (28.12.2020) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்குப் போராட்டம் நடைபெற்றது. 


பின்பு, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். இதில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் மற்றும் சீர்மரபினர் நலச் சங்க மாநிலச் செயலாளர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் மாநிலச் செயலாளர் காசிமாயத்தேவர், சீர்மரபினர் நலச்சங்கப் பிரச்சாரக் குழுத் தலைவர் செல்லப்பெருமாள் மற்றும் டி.என்.டி. குழுவின் மாவட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.