panvarilal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தமிழக கவர்னர் பன்வாவாரிலால் புரோகித் ஈரோட்டில் இன்று நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். காலை 10 மணிக்கு கோபிசெட்டிபாளையத்தில் மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி லட்சுமண ஐயரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் கலந்து கொண்டனர். பிறகு மதியம் 1 மணிக்கு ஈரோடு மாவட்ட அதிகாரிகள் காளிங்கராயன் அரசு விருந்தினர் விடுதியில் நடத்தினர்அதில் கலந்து கொண்டார்.அடுத்து பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார். இறுதியாக மாலை 4.30-க்கு ஈரோடு பேருந்து நிலையத்தில் தூய்மை பணியை ஆய்வு செய்து விட்டு மாலை 6 மணிக்கு திருப்பூர் சென்றார்.

Advertisment

வழக்கமாக கவர்னர் ஆய்வுக்குச் செல்லும் ஊர்களில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்துவது வழக்கம் ஆனால் ஈரோடு தி.மு.க.வினர் அந்தப் போராட்டத்தை இன்று நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.