Published on 22/01/2021 | Edited on 22/01/2021
ஜனவரி 29 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகின்ற நிலையில் தற்போது திமுக எம்பிக்கள் கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இக்கூட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் எம்பிக்கள் கூட்டம், வருகிற 26ஆம் தேதி நடைபெறும். இதில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.