நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் திமுக சார்பில் வெற்றிபெற்ற எம்பிகளுடன் திமுக தலைவர் சந்திப்பு மற்றும் ஆலோசனைகூட்டம் இன்று மாலை தொடங்கிநடைபெற்றது.இன்று பிற்பகல் மாலையேஇந்த கூட்டத்தில் பங்குபெற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகஎம்பிக்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி,பழனிவேல் தியாகராஜன், ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி ஆகியோர்இந்த கூட்டத்தில்கலந்துகொள்ள வருகை தந்த நிலையில் அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயம் வருகைதந்தார்.
அதன்பின் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடந்த ஆலோசனையில்திமுக நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர்.பாலுவும்,துணைத்தலைவராக கனிமொழியும், திமுக நாடாளுமன்ற கொறடாவாக ஆ.ராசாவும் தேர்வு செய்யப்பட்டனர்.