/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/xzfsfsf_2.jpg)
கடந்த ஜூலை 12-ஆம் தேதி திருப்போரூரில்கோவில் நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் உட்பட 11 கைது செய்யப்பட்டனர்.முக்கியமாகஇதயவர்மன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில்தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மனுக்குஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சிறையில் உள்ள எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்ளிட்ட 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையதிற்கு3 லட்சத்தை நன்கொடையாக அளிக்கவும், வேலூர்காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட எம்.எல்.ஏ. இதயவர்மனுக்குநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதேபோல்இதயவர்மனுடன் கைதான 10 பேரும்திருப்போரூர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர் குணமடைந்து வீடு திரும்ப, அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றம் இந்த நிபந்தனைஜாமீனைவழங்கியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)