தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரை ஒட்டிய தெற்கு திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி. இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கருப்பசாமியின் மனைவி தமயந்தி. இவர்களுக்கு கன்யா, வைஷ்ணவி, பிரதீப் ராஜ் என்று இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மாத விடுப்பில் ஊருக்கு வந்தவர் கடந்த ஃபிப்ரவரியில் பணிக்குத் திரும்பியிருந்தார்.
இந்நிலையில், காஷ்மீரின் லடாக் பகுதியில் ராணுவப் பணியிலிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் வீர மரணமடைந்தார். இத்தகவல் நேற்றைய தினம் கிராமத்திலுள்ள அவரது குடும்பத்தினருக்குத் தெரியவர, அவரின் குடும்பத்தினரோ துயரமடைந்தனர். மேலும் சொந்த ஊருக்கு கருப்பசாமியின் உடல் வராத நிலையில், அவரது உருவப் படத்திற்கு பலர் அஞ்சலி செலுத்தினர். தகவலறிந்த தொகுதி எம்.பி.யான கனிமொழி, கருப்பசாமியின் வீட்டுக்கு வந்தார்.அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினார்.தன் சொந்தப் பணத்திலிருந்து 2 லட்சம் நிதி உதவியளித்தார். பின்பு நிலவரங்களைக் கேட்ட கனிமொழி, வீரமரணமடைந்த கருப்பசாமியின் குடும்பத்திற்கு, நாங்கள் உறுதுணையாக இருப்போம். அவருடைய குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.கஏற்றுக் கொள்ளும் என்று கூறினார்.
கனிமொழியுடன் தி.மு.கபொறுப்பாளர்களும் வந்திருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/tryutr.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/sawqw.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/dewrewew.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/6tru86u86.jpg)